Author : Dr. N. Somash Kurukkal

பிரம்மஸ்ரீ பரமசாமி ஐயர்.

எங்கள் அருமை மணிமாமாவுக்கு கண்ணீர் அஞ்ஜலி. அனலைதீவினைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளை நாகவத்தையில் நெடுங்காலமும், பின்னர் கல்முனை பாண்டிருப்பிலும் வாழ்ந்து வந்த எமது மாமா பிரம்மஶ்ரீ: ந. பரமசாமி ஐயர்(மணிஐயா) அவர்கள் இன்று காலை புளியந்தீவு நாகேஸ்வரன் திருவடியில் அமைதி கொண்டார். அமரர்: ஶ்ரீமதி கிருஷ்ணவேணி அம்மாவின் துணைவரும், பண்டாரவளை மணிஅண்ணா, மணிமாமா எனவும் உறவுகளால் அழைக்கப்பெற்றவரும், புளியந்தீவு நாகேஸ்வரன் கோவில், பண்டாரவளை நாகவத்தை சுப்ரமணியசுவாமி கோவில், கல்முனை மாமாங்கப் பிள்ளையார் கோவில் என்பவற்றில் நீண்டகாலம் அரும் பணியாற்றிய […]

திருமண வாழ்த்து! சிவா/வர்ஷினி

அநேக கோடி நமஸ்காரங்களும் வாழ்த்துகளும்! “சகஸ்ர சந்திர தர்சனர்” எங்கள் குருநாதர், இந்து ஆகம நவீன கலை கலாச்சார(modern Hindu Culture) நிறுவனர் அதிவணக்கத்துக்குரிய டாக்டர் நா. சோமஸ்கந்த சிவாச்சாரியார் அவர்களின் ஜனனதினம் இன்று 02/05/2023!!! சிவாச்சாரியார் அவர்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள் தெரிவிப்பதுடன் அவர் ஆரோக்கியமாக மகிழ்வாக இன்று போல என்றும் மேன்மையாக சிறப்பாக வாழ எல்லாம் வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டி தம்பதிகளின் பாதம் பணிந்து […]

திருமண வாழ்த்து! தினேஷ் & லலனா!!!

திருமண வாழ்த்து! இன்று கனடா மார்க்கம் கொன்வென்ஷன் நிலைய திருமண மண்டபத்தில் மிக சிறப்பாக விமரிசையாக நடை பெற்ற விவாகம்!!! ஷடமர்ஷன கோத்திரம்(England) சிவஸ்ரீ பால. வசந்தன் குருக்கள் (பா. சர்வேஸ்வரக்குருக்கள்) ஸ்ரீமதி ஸ்ரீவித்யா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரி செளபாக்யவதி லலனா அவர்களுக்கும் காசிப கோத்திரம் (Canada) சிவஸ்ரீ ஸ்ரீனி. குகன் குருக்கள் (ஸ்ரீ. குகனேஸ்வரக் குருக்கள்) ஸ்ரீமதி சத்யலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரன் சிரஞ்சீவி தினேஷ் சர்மா அவர்களுக்கும் இன்று 05/05/2023 வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக […]

நிறுவனருக்கு வாழ்த்து!

07/05/2023 இன்று அனுஷ நட்சத்திரம்!!! ஆமாம்! எங்களுடைய குருநாதர், வழிகாட்டி , இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனர் (Modern Hindu Culture.org) அதி வந்தனத்துக்குரிய டாக்டர் நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியார் அவர்களின் ஜன்ம நட்சத்திரம்! 81ஆவது அகவை மங்கல விழா!!! Toronto வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று நடைபெற்ற ஜன்ம நட்சத்திர விசேட வழிபாடுகள் அபிஷேக ஆராதனைகளில் தம்பதி சமேதராக குருநாதர் அவர்கள் கலந்து கொண்டார். தேக திட ஆரோக்கியத்துடன் இன்று போல என்றும் மகிழ்வுடன் […]

காயத்திரி மந்திரங்கள்! அதன் மகிமை!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ”காயத்ரி மந்திரம்” காயத்ரி மந்திரத்துக்கு இணையான மந்திரம் உலகில் கிடையாது. இந்த மந்திரம், விசுவாமித்திர முனிவரால் அருளப்பட்டது. `காயத்ரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் வந்தது. காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி, சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை நேரத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. […]

சிராத்தம் சம்பந்தமானது! தகவல்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் இருக்கலாம், தெளிவோமே !!! சகோதரர்கள் ஒன்றாக இணைந்து வசிக்கும் பட்சத்தில் ஒன்றாகவே சிராத்தம் செய்யலாம். வெவ்வேறு ஊர்களில் தனித்தனியே வசிப்பவர்கள் என்றால் தனித்தனியாகத்தான் சிராத்தம் செய்ய வேண்டும். பாகம் பிரிந்துவிட்டாலே சிராத்தமும் தனிதான் என்பதை சாஸ்திரம் உறுதியாகச் சொல்கிறது. பாகம் என்றால் சொத்தில் பாகப்பிரிவினை என்று பொருள்காணக் கூடாது. பாகம் என்றால் சமையல் என்று பொருள். நல்ல ருசியாக சமைப்பதை நளபாகம் என்று சொல்லக் கேட்டிருப்போம். ஆக இங்கே […]

வாழ்த்து! தர்மபுர ஆதீனத்திடம் இருந்து!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  N Sarvesvara Kurukkal- நிறுவனத் தலைவர். நிறுவனத் தலைவர் முத்தமிழ்க் குருமணி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக்குருக்கள் அவர்கள், கிரியாகலாப மணி சிவஸ்ரீ நா,சோமாஸ்கந்த சிவாச்சாரியார்,தம்பதிகள் சதாபிஷேகத்தை முன்னிட்டு இந்துஆகம நவீனகலைகலாசார நிறுவன பத்திராதிபர், பிரமஸ்ரீ,சுவாமிநாத பஞ்சாக்ஷர சர்மா அவர்களினால் தொகுத்த சதாபிஷேக மலர் ஸ்வாமிகளிடம் சமர்ப்பித்து ஆசிபெற்ற நிகழ்வு 20=5=2023 பகல்

சிவஸ்ரீ சர்வேஸ்வரக் குருக்கள் அவர்களுக்கு தர்மபுர ஆதீன வாழ்த்து.

தருமபுர ஆதீன அதி உயர் விருது பெற்ற நிறுவனத் தலைவர் அவர்களுக்கு பெருமை மிகு வாழ்த்து ! சீர்காழி மகா கும்பாபிஷேகத்தில் தருமை ஆதீன குருமகா சந்நிதானம் சுவாமிகள் திருக்கரங்களால் இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனத்தின் (Modern Hindu Culture) தலைவர் முத்தமிழ்க் குருமணி சிவஸ்ரீ டாக்டர் நா. சர்வேஸ்வர சிவாச்சாரியார் அவர்கள் “சிவாகம கலாநிதி” என்ற உயர் ஞான விருதும் கௌரவமும் பெற்று ஈழ வள நாட்டுக்கும் சைவ உலகுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். […]

தேங்காய் வைத்து கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்துகொள்வோம்.

பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் அடிக்கடி தோன்றும். அந்த வகையில கும்பம் வைக்கும்போது ஏன் தேங்காயை கும்பத்தின் மீது வைக்கிறோம்? வேறு காய்களோ ,பழங்களோ ஏன் வைப்பதில்லை என்பதன் விளக்கத்தை தருமாறு அன்பர் ஒருவர் கேட்டுள்ளார். ஆன்மீகப் பெரியவர்கள் இதுக்கு சொன்ன விளக்கத்தை பார்ப்போம்!!! முதலில் கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்துகொள்வோம். மனிதன் உயிர்வாழத் தேவையானது தண்ணீர். நீர் இன்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அந்த நீரில் இறைவனை ஆவாஹனம் செய்வதற்காக […]

Scroll to top