தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
சாஸ்திரங்களும் விதிமுறைகளும் அறிவோம்!
நீங்கள் நினைத்தவாறு சாஸ்திர விதிமுறைகளைத் தங்களது விருப்பப்படி யாரும் தளர்த்த இயலாது.
எந்த நேரத்தில் விதிகளை – கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் என்று சாஸ்திரம் சொல்லும்.
அதை மட்டும் தாங்கள் ஏற்கலாம். தொலை நோக்குடன், மனித இனத்தின் உயர்வை மையமாக வைத்து வகுக்கப் பட்ட சட்ட திட்டத்தின் வடிவமே சாஸ்திரம்.
நம் போன்றவர்கள் அதில் கை வைக்க வேண்டும் எனில், அதன் குறிக்கோளை முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். முக்காலமும் அறிந்த முனிவர் பரம்பரையின் பரிசு அது.
காய்ச்சல் , உடம்பு சரியில்லை. அப்போது குளித்தால் துயரம் இரட்டிப்பாகும். சளி இருமல் அதிகமாக வாய்ப்புண்டு!! குளிக்க முடியாது, குளிக்கவில்லை எனில், சாஸ்திரம் மீறப்படும். அப்போது, ‘குளிக்க வேண்டாம்; மேனியில் தண்ணீரைத் தெளித்துக்கொண்டால் போதும்’ என்று சாஸ்திரம் விதியைத் தளர்த்தும்.
ஆனால், குளிப்பதற்கான வாய்ப்பும் சுகாதாரமும் இருந்தும், குத்துக் கல்லாட்டம் இருந்து கொண்டு குளிக்காமல் இருப்பதை தர்ம சாஸ்திரம் ஏற்காது.
துரதிர்ஷ்டவசமாக தந்தை இறந்துவிட்டார். மகனுக்கு ஒரு வயதுதான் ஆகிறது. அப்போது, அவன் செய்ய வேண்டிய ஈமச் சடங்கை மற்றவர் வாயிலாகச் செய்யச் சொல்கிறது சாஸ்திரம்.
அதேநேரம், உடல் ஆரோக்கியத்துடன் இளம் வயதில் மகன் இருந்தால், அவனையே நேரடியாக ஈமச் சடங்கில் ஈடுபட சாஸ்திரம் சொல்லும்.
வாய் பேச இயலாத ஒருவர். அவரால் மந்திரம் சொல்ல இயலாது. ‘அவர், மந்திரத்தைக் காதால் கேட்டால் போதும்!’ என்று சாஸ்திரம் கட்டுப்பாட்டைத் தளர்த்தும். தர்ம சாஸ்திரம் சொன்னதை மட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாமாகவே தன்னிச்சையாக சாஸ்திர விதிமுறைகளையோ, கட்டுப் பாடுகளையோ தளர்த்தக் கூடாது. தளர்த்தினால் பலன் கிடைக்காது.
சில உதாரணங்களை தந்துள்ளோம், இப்படி சாஸ்திர விதிகள் தளர்வுகள் பல உண்டு! அடுத்த அடுத்த தொகுப்புகளில் பார்ப்போம்!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின் இதழ் ஆசிரியர், www.modermhinduculture.com
சாஸ்திரங்களும் விதிமுறைகளும் அறிவோம்!