சுவாமிக்கு தேங்காயும் அதன் குடுமியும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
சுவாமிக்கு தேங்காயும் அதன் குடுமியும்!!!
கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட செல்கையில், தேங்காய், பழம், பூ கொண்டு போவது வழக்கம். அவ்வாறு, சுவாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்போது, தேங்காயை குடுமியுடன் பயன்படுத்த வேண்டுமா?… அல்லது அவற்றை அகற்றிவிட வேண்டுமா? என்பது பற்றிய சந்தேகம் பலரிடமும் இருக்கும்.
ஆனால், யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது?, யாரும் தவறாக நினைத்து கொள்வார்களோ என்று பலரும் இது குறித்து தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. எல்லோரும், செய்கிறார்கள். நாமும் செய்வோம் என்றுதான் பலரும் செய்கின்றனர். இந்நிலையில், அதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.
பண்டைய காலத்தில் அரசர்கள், வணிகர்கள் மற்றும் மறை ஓதுபவர்கள் ஆகியோர் பரம்பரை, பரம்பரையாகக் குடுமி வைத்துக் கொண்டிருந்தனர். குடுமி என்பது உடலின் ஒரு அங்கமாகவே பார்க்கப்பட்டது. இன்று அந்த குடுமி வைப்பது அருகிவருவது வேறு விஷயம்!!! அதுபோல, தேங்காயின் ஓர் உறுப்பாகத் திகழ்வது அதன் குடுமி. அதை அகற்றிவிட்டால், தேங்காய் பின்னம் (ஊனம்) அடைந்து விடும்.
பொதுவாக, இறைவனுக்குப் படைக்கப்படும் பொருள் எதுவாக இருந்தாலும், அது பின்னம் அற்றதாக இருக்க வேண்டும். பின்னம் என்றால் ஊனம் என்று பொருள்!!! எனவேதான், தேங்காய் உடைக்கும்போது குடுமியுடன் இருக்க வேண்டும்.
எனவே, உடைக்கும்போது, தேங்காய், குடுமியுடன் இருக்க வேண்டும். உடைத்தப் பிறகு அதை அகற்றலாம். உடைப்பதற்கு முன் தேங்காயில் உயிரோட்டம் உண்டு. அது பிரிந்த பிறகு, குடுமியை அகற்ற வேண்டும்.
தென்னையில் இருந்து கிடைக்கும் முக்கண் கொண்ட தேங்காய், முக்கண்ணனான ஈசனுக்குச் சமம். ‘உனது குடுமி எனது துயரத்தைத் துடைக்கட்டும்!’ என்ற வேண்டுதலை முன்வைத்து, தேங்காயைப் போற்றும் செய்யுள் ஒன்றுண்டு.
உடைப்பதற்கு முன் தேங்காயில் உயிரோட்டம் உண்டு. உடைத்ததன் காரணமாக, அது பிரிந்த பிறகு, குடுமியை அகற்ற வேண்டும். மேலும், உடைத்த பிறகு இறைவனுக்கு படைக்கும் பிரசாதமாக கருதப்படுவதால், அவை குடுமி அகற்றி, சுத்தமாக படைக்கப்பட வேண்டும்.
ஊனம் இல்லாத உடலில் தேவதை தங்கியிருக்கும். நாருடன்கூடிய மட்டைத் தேங்காய் பல நாள்கள் கெடாமல் இருக்கும். தேங்காய் நார் அதற்குப் பாதுகாப்பு. ‘மூளையைப் பாதுகாக்க குடுமி இருக்க வேண்டும்!’ என்பது ஆயுர்வேதத்தின் அறிவுரை.
ஆனால், நாம் குடுமியை என்றோ இழந்து விட்டோம். தேங்காய்க்காவது இருந்துவிட்டுப் போகட்டுமே!!!உடைக்கும் வரை பொறுமையாக இருங்கள். உடைத்தப் பிறகு எடுத்துவிடலாம்.
அதேபோல், கும்பாபிசேகம், ஹோமங்கள் நடத்தும் போது, கும்பம் வைத்து, அதில் இறைவனை குடியிருத்துவர். குடம்,
இறைவனின் திருமேனி. குடத்தின் மேல் வைக்கப்படும் தேங்காய், இறைவனின் சிரம்; தேங்காயில் இறைவனின் முகத்தை சந்தனத்தால் உருவாக்குவர். அதற்கு தேங்காய், சிகையுடன் அதாவது குடுமியுடன் திகழ வேண்டும். எனவேதான் , குடுமியுடன் கூடிய தேங்காயைக் கும்பத்தில் வைப்பது வழக்கம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
No photo description available.
சுவாமிக்கு தேங்காயும் அதன் குடுமியும்!!!
Scroll to top