தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பகுதி 1.
சாஸ்தா தரிசனம்! – அபூர்வத் தகவல்கள்!
அறியாதவர்கள் அறிந்து கொள்ள இந்த தகவல்கள் உதவும்!!!
சாஸ்தா என்றால் ஆளுபவன் என்று பொருள். ‘தர்மஸ்ய சாஸனம் கரோதி இதி தர்ம சாஸ்தா’ – தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக ஐயப்பன் இருப்பதால், அவரை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம்.
* மகா சாஸ்தா, மேரு மலையில் ஸ்படிக மயமான சிகரத்தில் வீற்றிருக்கும் பரம்பொருள். அவரே துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனத்துக்காக பல அவதாரங்களை எடுக்கிறார். மகாவிஷ்ணு வின் அவதாரங்கள் எல்லோருக்கும் தெரியும். அதுபோல் மகா சாஸ்தாவுக்கு எட்டு அவதாரங் கள் உண்டு. அவை: ஆதி சாஸ்தா, கால சாஸ்தா, பால சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, ஆர்ய சாஸ்தா, விஸ்வ சாஸ்தா, கிராத சாஸ்தா மற்றும் புவன சாஸ்தா.
ஆதி சாஸ்தாவுக்கு பூர்ணா-புஷ்கலா என்ற இரு மனைவியர் உண்டு. அச்சன்கோவில் முதலான தலங்களில் உள்ள திருவடிவம் இதுவே. இந்த ஆதி சாஸ்தாவையே தமிழகத்திலும், மற்றும் பல நாடுகளிலும் ஐயனார் என்று அழைப்பார்கள்!
* கால சாஸ்தாவை வழிபடுவதால் எதிரி களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்; யம பயம் விலகும்.
* பால சாஸ்தா பால் கிண்ணத்தைக் கையில் ஏந்தி, குழந்தை வடிவில் காட்சி தருபவர். ஞானத்தையும் வெற்றியையும் தரக்கூடியவர். நோய்களையெல்லாம் நீக்கும் இவரையே ‘தந்வந்த்ரி சாஸ்தா’ என்றும் அழைப்பர்.
சம்மோஹன சாஸ்தா சகலவிதமான செளக்கியங்களையும் தந்து நல்வாழ்வு அருளக் கூடியவர்.
* ஆர்ய சாஸ்தா எனும் அவதாரத்தில் சாஸ்தாவுக்கு ‘ப்ரபா’ என்ற மனைவியும் `ஸத்யகன்’ என்ற மகனும் உண்டு. இவர் குழந்தை பாக்கியமும் தரக்கூடியவர்.
பகவான் வேட்டைக்காரனாக காட்சிதரும் கோலம் – கிராத சாஸ்தா திருக்கோலமாகும். எருமேலி முதலான தலங்களில் இந்தத் திருவடி வில் சாஸ்தாவைக் காணலாம்.
* புவன சாஸ்தாவாக அவதரித்த வேளையில் மதனா – வர்ணினீ என்ற இரு மனைவியரைக் கொண்டதாக சுப்ரபேத ஆகமம் கூறுகிறது.
மஹிஷி சம்ஹாரத்தின் பொருட்டு ராஜசேகர பாண்டியனுக்கு மகனாகத் தோன்றியதே ஸ்ரீசாஸ்தாவின் மணிகண்ட அவதாரம். இதுவே கலியுக அவதாரம்!
பதினெட்டாம் படிகளுக்குக் காவலாக கடூரவன் (என்ற) கடுத்த ஸ்வாமியும், க்ருஷ்ணாபன் (என்ற) கருப்ப ஸ்வாமியும் இருப்பதாக ஸ்ரீபூதநாத உபாக்யானம் கூறுகிறது.
சபரிமலையை தவிர மற்ற கோயில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் காணலாம். அதன்படி, சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மறு கால் மடித்தபடியும் இருக்கும். மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.
ஐயனார் சுவாமி பற்றிய மேலும் விபரங்கள் நாளைய பதிவில் பார்க்கலாம்!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
சாஸ்தா தரிசனம்! – அபூர்வத் தகவல்கள்!