காயத்திரி மந்திரங்கள்! அதன் மகிமை!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
”காயத்ரி மந்திரம்”
காயத்ரி மந்திரத்துக்கு இணையான மந்திரம் உலகில் கிடையாது. இந்த மந்திரம், விசுவாமித்திர முனிவரால் அருளப்பட்டது. `காயத்ரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் வந்தது. காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி, சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை நேரத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத்தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றதாகும். விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிரார்த்தனையாக உள்ளது.
காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும்:
“ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.”
காயத்ரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.
உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ஒவ்வொரு வருடைய இஷ்ட கடவுளை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. நாம் நாள்தோறும் ஆட்டோ, பஸ், ரயில், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம், விமானம் மற்றும் கால்நடையாக பயணம் செய்கிறோம்.
நாம் பயணம் செய்யும்போது பலவிதமான இன்னல்கள், பிரச்னைகள் விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. இம்மாதிரியான தொந்தரவுகளிலிருந்து நாம் விடுபட சில காயத்ரி மந்திரங்களை சொல்வதால் கஷ்டங்கள் விலகி நன்மை அடைய செய்யும் என்று நம்பப்படுகிறது. ஆன்மீக பலன் வாசகர்கள் அனைவரும் இந்த காயத்திரி மந்திரங்களை படித்து நன்மை அடைய வேண்டுகிறோம்.
விநாயகர்
ஏகதந்தாய வித்மஹே சூர்பகர்ணாய தீமஹி தன்னோ தந்தி: ப்ரசோதயாது!
முருகன்
கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி தன்னோ ஷண்முக: ப்ரசோதயாது!
சிவன்
தத் புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ர: ப்ரசோதயாது!
தன் மஹே சாய வித்மஹே வாக் விசுத்தாய தீமஹி தன்னச்சிவ: ப்ரசோதயாது!
நிரஞ்சனாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி தன்னோ ஷுஷ்ம: ப்ரசோதயாது!
பார்வதி
மஹா தேவ்யைச வித்மஹே ருத்ர பத்னீச தீமஹி தன்னோ கௌரி: ப்ரசோதயாது!
கணாம்பிகாய வித்மஹே பராசக்தியைச தீமஹி தன்னோ கௌரி: ப்ரசோதயாது!
துர்கா
காத்யாயநாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி தன்னோ துர்க்கி: ப்ரசோதயாது!
சூரியன்
பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராய தீமஹி தன்னோ ஆதித்ய: ப்ரசோதயாது!
சந்திரன்
சீதப்ரபாய வித்மஹே சோடசகலாய தீமஹி தன்னோ ஸ்ஸோம: ப்ரசோதயாது!
அங்காரகன்
ஆங்கீரஸாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம: ப்ரசோதயாது!
புதன்
ஆத்ரேயாய வித்மஹே சோமபுத்ராய தீமஹி தன்னோ சௌம்ய: ப்ரசோதயாது!
குரு
ஆங்கீரஸாய வித்மஹே ஸுராச்சார்ய தீமஹி தன்னோ குரு: ப்ரசோதயாது!
சுக்கிரன்
பார்க்கவாய வித்மஹே ஸுராச்சார்ய தீமஹி தன்னோ சுக்ர: ப்ரசோதயாது!
சனி
சனைச்சராய வித்மஹே சாயா புத்ராய தீமஹி தன்னோ மந்த: ப்ரசோதயாது!
ராகு
பிரும்ம புத்ராய வித்மஹே சாயா புத்ராய தீமஹி தன்னோ ராஹூ: ப்ரசோதயாது!
கேது
ஜைமினி கோத்ராய வித்மஹே தூம் ரவர்ணாய தீமஹி தன்னோ கேது: ப்ரசோதயாது!
நந்திகேசர்
வேத்ரஹஸ்தாய வித்மஹே டங்க ஹஸ்தாய தீமஹி தன்னோ வ்ருஷப: ப்ரசோதயாது!
தீஷ்ணச்ருங்காய வித்மஹே வேதபாதாய தீமஹி தன்னோ விருஷப: ப்ரசோதயாது!
சண்டிகேசர்
டங்க ஹஸ்தாய வித்மஹே சிவசிந்தாய தீமஹி தன்னோ சண்ட: ப்ரசோதயாது!
மஹாலட்சுமி
மஹாலக்ஷ்மீச வித்மஹே விஷ்ணு பத்னீச தீமஹி தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோதயாது!
காளி
பிசாசத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ காளீ: ப்ரசோதயாது!
சாஸ்தா
கஜத்வஜாய வித்மஹே ஸ்ருணி ஹஸ்தாய தீமஹி தன்னோ சாஸ்தா: ப்ரசோதயாது!
விருஷபம்
தீஷ்ண சிருங்காய வித்மஹே வேத ஹஸ்தாய தீமஹி தன்னோ விருஷப: ப்ரசோதயாது!
யானை (கஜம்)
சுவேத வர்ணாய வித்மஹே வேத ஹஸ்தாய தீமஹி தன்னோ கஜ: ப்ரசோதயாது!
மயில் (மயூரம்)
பக்ஷி ராஜாய வித்மஹே சுக்ல பங்காய தீமஹி தன்னோ சிகி: ப்ரசோதயாது!
சரஸ்வதி
வாக்தேவீச வித்மஹே விரிஞ்சி பத்னீச தீமஹி தன்னோ வாணி: ப்ரசோதயாது!
சுதர்சனர்
சக்ர ராஜாய வித்மஹே சஹஸ்ர ஜ்வாலாய தீமஹி தன்னோ சக்ர: ப்ரசோதயாது!
பிரும்மா
ஹம்சருடாய வித்மஹே கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி தன்னோ பிரும்ம: ப்ரசோதயாது!
தினமும் படியுங்கள். அருள் பெறுங்கள்.
தொகுப்பு:- சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா,
இணையதள மின் இதழ் ஆசிரியர்
www.ModernHinduculture​. com- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.
காயத்திரி மந்திரங்கள்! அதன் மகிமை!!!
Scroll to top