நிறுவனருக்கு வாழ்த்து!

07/05/2023 இன்று அனுஷ நட்சத்திரம்!!! ஆமாம்! எங்களுடைய குருநாதர், வழிகாட்டி , இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனர் (Modern Hindu Culture.org) அதி வந்தனத்துக்குரிய டாக்டர் நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியார் அவர்களின் ஜன்ம நட்சத்திரம்! 81ஆவது அகவை மங்கல விழா!!!
Toronto வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று நடைபெற்ற ஜன்ம நட்சத்திர விசேட வழிபாடுகள் அபிஷேக ஆராதனைகளில் தம்பதி சமேதராக குருநாதர் அவர்கள் கலந்து கொண்டார். தேக திட ஆரோக்கியத்துடன் இன்று போல என்றும் மகிழ்வுடன் எல்லாம் வல்ல ஸ்ரீ சொர்ணாம்பிகாதேவி சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானின் பொற்பாதங்களை வணங்கி வாழ்த்துகிறோம்.
அன்புக்குரிய இலண்டன் வசந்தன் குருக்களின் அன்புக் கவி மழையை சிவாச்சாரியார் தம்பதிகளுக்கு சமரப்பிக்கிறோம்!!!
””சுன்னாகம்
ஆயிரம் பிறைகண்ட அந்தணாளர்
சோமண்ணா அவர்களின் ஜன்ம நட்சத்திர தினத்தில் ஆசிகள் வேண்டுவோம்
சுந்தரமாம் வதனமும் சுத்தமுறு உரையும்
..சுன்னாகத் தோன்றலாம் சோமண்ணா குருவாம்!
மந்திரத்தின் வலிமையும் மலர்கின்ற சிரிப்பும்
..மக்களினது மனங்களில் மகிமைதரு செயலும்
சொந்தமான உறவெனச் சேர்ந்திருக்கும் இடத்தில்
…சுற்றிவந்து நட்புடன் சுறுசுறுப்பும்
சேர
வந்தகுரு வயதினால் வருடமொன்று கூட
..வணங்கிநாமும் வேண்டுவோம் நூறாண்டு வளமே.”’
Modern Hindu Culture நிறுவன தலைமையகம், சுன்னாகம்.
சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள்,
பிரம்மஸ்ரீ சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா.
நிறுவனருக்கு வாழ்த்து!
Scroll to top