தருமபுர ஆதீன அதி உயர் விருது பெற்ற நிறுவனத் தலைவர் அவர்களுக்கு பெருமை மிகு வாழ்த்து !
சீர்காழி மகா கும்பாபிஷேகத்தில் தருமை ஆதீன குருமகா சந்நிதானம் சுவாமிகள் திருக்கரங்களால் இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனத்தின் (Modern Hindu Culture) தலைவர் முத்தமிழ்க் குருமணி சிவஸ்ரீ டாக்டர் நா. சர்வேஸ்வர சிவாச்சாரியார் அவர்கள் “சிவாகம கலாநிதி” என்ற உயர் ஞான விருதும் கௌரவமும் பெற்று ஈழ வள நாட்டுக்கும் சைவ உலகுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.
பாமரனும் புரிந்து கொள்ளும் வகையிலும், இளைஞர்களை உயர்த்தும் ஏணியாகவும் – யதார்த்தத்தின் வழி சமய கிரியைகளில் புரிதலை ஏற்படுத்தும் பெருமகன் இவர்.
ஆன்மீகம் மட்டுமல்ல.. கலை உணர்வு.. தமிழ் பற்று..
பேச்சாளுமை, ஏற்றத்தாழ்வு பாராமை, என்று எல்லா உயர்வுகளும் கொண்ட முத்தமிழ்க்குருமணி…அவர்களின் உன்னத செயல்பாடுகளுக்கு மிகப் பெரிய உதாரணம் சண்டிலிப்பாய் வேத சிவாகம பாடசாலையும் அங்கு பயிற்சி பெற்று சிறந்த சிவாச்சாரியர்களாக திகழும் குருமாரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!!!
சிவாகம கலாநிதி நா. சர்வேஸ்வரக் குருக்கள் அவர்கள் மேலும் பல சிறப்புகள் பெற்று அவர் தொடர்ந்து ஆற்றும் சமய சமூகப் பணிகள் மேலும் சிறக்க எல்லாம் வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா தேவி சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானின் அருட்கடாட்சம் வேண்டி வாழ்த்துகிறோம்.
Modern Hindu Culture நிறுவன தலைமையகம், சுன்னாகம்.
சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்தக் குருக்கள்,
ப்ரம்மஸ்ரீ சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா.
சிவஸ்ரீ சர்வேஸ்வரக் குருக்கள் அவர்களுக்கு தர்மபுர ஆதீன வாழ்த்து.