பிரம்மஸ்ரீ பரமசாமி ஐயர்.

எங்கள் அருமை மணிமாமாவுக்கு
கண்ணீர் அஞ்ஜலி.
அனலைதீவினைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளை நாகவத்தையில் நெடுங்காலமும், பின்னர் கல்முனை பாண்டிருப்பிலும் வாழ்ந்து வந்த எமது மாமா பிரம்மஶ்ரீ: ந. பரமசாமி ஐயர்(மணிஐயா) அவர்கள் இன்று காலை புளியந்தீவு நாகேஸ்வரன் திருவடியில் அமைதி கொண்டார்.
அமரர்: ஶ்ரீமதி கிருஷ்ணவேணி அம்மாவின் துணைவரும், பண்டாரவளை மணிஅண்ணா, மணிமாமா எனவும் உறவுகளால் அழைக்கப்பெற்றவரும், புளியந்தீவு நாகேஸ்வரன் கோவில், பண்டாரவளை நாகவத்தை சுப்ரமணியசுவாமி கோவில், கல்முனை மாமாங்கப் பிள்ளையார் கோவில் என்பவற்றில் நீண்டகாலம் அரும் பணியாற்றிய காலங்களில், அந்த ஆலயங்களின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்புக்களை சலிக்காது வழங்கிவந்தமையால் அப்பகுதி மக்களின் அளவிலா அன்புக்குப் பாத்திரமுமான அமரரது உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் ஆழந்த அனுதாபங்கள். உரித்
தாகுக! அன்னாரது ஆன்மா ப?சாந்தி பெற சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச் சிவனைப் பிரார்த்திக்கின்றோம் !
ஓம் சாந்தி.
நா.சோமாஸ்கந்தக் குருக்கள
நா.சர்வேஸ்வரக் குருக்கள.
MHC தலைமையகம்.
சுன்னாகம்.
May be an illustration of 1 person
பிரம்மஸ்ரீ பரமசாமி ஐயர்.
Scroll to top