ஐயப்பன், ஐயனார் இவர்கள் இருவரும் ஒருவரா?
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஐயப்பன், ஐயனார் இவர்கள் இருவரும் ஒருவரா? ஐயனார் வழிபாடு என்பது மிகப் பழைய காலந்தொட்டே தமிழகத்திலும் இலங்கையிலும் விரவிக் காணப்படுகின்றது. ஊர்கள் தோறும் வயல் நிலங்களிலும் கடலோரத்திலும் மலை உச்சிகளிலும் ஐயனாருக்கு கோயில் எழுப்பி தமிழர்கள் பாரம்பரியமாக கிராம உணர்வுடன் இயற்கை வழிபாடாற்றியும் சிவாகம பூர்வமாகப் திருக்கோயில் எழுப்பி பிரதிஷ்டை செய்து வேதாகம நெறி சார்ந்தும் வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள். சாத்தா (சாஸ்தா) என்றும் அழைக்கப்பெறும் ஐயனார் கிராம தேவதையாகவும் வழிபடப்பட்டு வந்துள்ளார். […]