ஏன் சிதறு தேங்காய் உடைக்கிறோம்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
ஏன் சிதறு தேங்காய் உடைக்கிறோம்?
விக்நேஸ்வரர், தம் அப்பாவான ஈஸ்வரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்கு பிடிக்கும்.
அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈஸ்வரனைப் போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார். சிதறு தேங்காய் என்று உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அம்ருத ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறு தேங்காய் உணர்த்துகிறது.
ஆகவே நண்பர்களே, எங்களின் நல்ல எண்ணங்களை வெளியே கொண்டுவருவதற்றக்கு அந்த நல்ல எண்ணங்களை சுற்றி இருக்கும் தீமைகளை முதலில் நீங்கள் அகற்றுங்கள். சிதறு தேங்காய் போல. உங்கள் அமிர்தமான நல்ல எண்ணங்கள் பலருக்கும் உதவும்.
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
ஏன் சிதறு தேங்காய் உடைக்கிறோம்?
Scroll to top