மகாளய பட்ஷம் , எங்களை சிறப்பாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் எங்கள் முன்னோர்களை நன்றியுடன் நினைவு கூரும் மிக உன்னத நேரமிது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
மகாளய பட்ஷம் , எங்களை சிறப்பாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் எங்கள் முன்னோர்களை நன்றியுடன் நினைவு கூரும் மிக உன்னத நேரமிது.
ஆவணி மாத அமாவாசையில், உங்களின் முன்னோரை நினைத்து அவர்களுக்கு பூஜை செய்யுங்கள். நான்குபேருக்கேனும் தயிர்சாதம் பொட்டலம் வழங்குங்களேன். உங்களையும் உங்கள் சந்ததியையும் முன்னோர்கள் இனிதே வாழ ஆசீர்வதிப்பார்கள். பித்ருக்களின் அருளாலும் ஆசியாலும் கடாட்ஷமாக வாழ்வீர்கள். வடை பாயாசம் என்று எங்களால் பெரிதாக செய்ய முடியவில்லை என்றாலும் எங்களால் முடிந்த அளவு தான தருமங்களை செய்வோம்,
நம் முன்னோர்களை பித்ருக்கள் என்று சொல்லுவோம். வழிபாடுகளில், நம் முன்னோர்களையும் பித்ருக்களையும் தவறாமல் வணங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது சாஸ்திரம். வீட்டில், எந்த விசேஷங்கள் நடந்தாலும் அந்தக் காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, முன்னோர்களையும் குலதெய்வத்தையும் பூஜை செய்யவேண்டும்.
ஒவ்வொரு மாதத்தின் அமாவாசையிலும் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகிறது சாஸ்திரம். அமாவாசை என்பது பித்ருக்களுக்கு உரிய நாள். அவர்களை வழிபடுவதற்கு உரிய நாள். அந்தநாளில், எள்ளும் தண்ணீரும் கொண்டு, தர்ப்பணம் செய்யவேண்டும். அரிசி, வாழைக்காய், வெற்றிலை, பாக்குடன் நம்மால் முடிந்த தட்சணையை வழங்கி, நமஸ்கரிக்க வேண்டும்.
முன்னோரை நினைத்து, தினமும் காகத்துக்கு உணவிடுவது நம் குலத்தையும் வம்சத்தையும் வாழச் செய்யும். தழைக்கச் செய்யும். வாழையடி வாழையென வளரச் செய்யும். குறிப்பாக, அமாவாசை முதலான பித்ருக்களுக்கு உரிய நாட்களில், அவசியம் காகத்துக்கு உணவிடவேண்டும். ஆகவே, காகத்துக்கு உணவிடுங்கள்.
இந்த நாளில், நம் முன்னோரை நினைத்துச் செய்கிற காரியங்கள் அனைத்துமே, அவர்களைப் போய்ச்சேரும் என்றும் அதில் குளிர்ந்து முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்றும் விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஆகவே, ஆவணி அமாவாசை தினத்தில், முன்னோரை நினைத்து நான்கு பேருக்கேனும் தயிர்சாதம் வழங்குங்கள். முன்னோரின் ஆசியைப் பெறுங்கள்.

Comment
Share
மகாளய பட்ஷம் , எங்களை சிறப்பாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் எங்கள் முன்னோர்களை நன்றியுடன் நினைவு கூரும் மிக உன்னத நேரமிது.
Scroll to top