தெய்வம் எப்படியிருக்கிறது? எல்லாமுமாகவும் இருக்கிறது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
வேதங்கள், மந்திரங்களின் மகத்துவதை அறிவோம்!
தெய்வம் எப்படியிருக்கிறது? எல்லாமுமாகவும் இருக்கிறது. ஆலயத்தில் கல்லுக்குள் இருக்கிறது. வானத்தில் சூரியனாக சுடர் விடுகிறது. இடியாக கர்ஜிக்கிறது. மழையாகி கருணையைப் பொழிகிறது. அக்னியாக ஜொலிக்கிறது. மலையும் மண்ணுமாகி எல்லோரையும் தாங்குகிறது. கடலென விரிந்திருக்கிறது. விண்மீன்களுக்குள் மின்னுகிறது. காற்றாக சுழன்று எல்லோரையும் அணைக்கிறது. மரம் செடி கொடியாகி ஜீவன்களை காக்கிறது.
இப்படி தெய்வம் எல்லாமுமாக இருப்பதை கூறிய ஞானியர், அது ஒலியாகவும் இருப்பதை கண்டனர். அதோடு நில்லாது அதை அப்படியே கிரகித்து அந்த சப்தங்களை, அசைவை, ஓசையை அப்படியே வேதங்களாக்கி வைத்தனர்.
எங்கேயோ அண்டத்திலுள்ள வேதங்களை நாம் பயனுற வேண்டியே தொகுத்தனர். அந்த ரிஷிகள் மிக விநயமாக, ‘‘நான் அந்த மந்திரம் அங்கு கிடந்ததை பார்த்தேன். அதை உங்களுக்கு கொடுக்கிறேன்’’ என்று கூறினார்கள். மறந்துபோய்க்கூட நான் எழுதினேன் என்று சொல்லவில்லை. இப்படி அநாதியாக கிடந்த மந்திரத்தை பார்த்தவர்களை ரிஷி என்றழைத்தனர். ரிஷி என்றாலே மந்திரத்தை நேரில் தரிசித்தவர்கள் என்று பொருள். அந்த வேதங்களே சப்த பிரம்மமாகும். அதாவது தெய்வமே ஒலி வடிவாக இருப்பதாகும்.
அதற்கு மந்திரம் என்று பெயர் வைத்தனர். ‘மனனாத் த்ராயதே இதி மந்த்ர:’ என்பார்கள். மனதால் நினைப்பவரை, மனனம் செய்பவரை தன் மகத்துவத்தால் காப்பாற்றுவதால் இதற்கு மந்திரம் என்று பெயர். அர்ச்சாவதாரமாக உள்ள சிவாலய ஈசனை நேரே வணங்குவதும், எங்கேயோ ஒரு பூஜையறையில் அமர்ந்து ருத்ரம் சொல்லுவதும் ஒன்றேயாகும். மந்திரம் பிரம்ம வஸ்துவான அந்த தெய்வத்தின் ஒலி ரூபம்.
பிரபஞ்சத்தின் படைப்பில் ஆதியில் ஒலி மட்டுமே இருந்தது. அந்த சப்தமே பொருளாக மாறியது. மீண்டும் பிரளயத்தில் ஒன்றுக்குள் ஒன்றாக ஒடுங்கி இறுதியில் ஒலியாகி அதுவும் ஓம் எனும் பிரணவத்திற்குள் சென்று உறைவதாக வேதங்கள் ஆணித்தரமாக கூறுகின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து இன்ப துன்பங்களுக்கும் மந்திரங்கள் உண்டு. மனிதன் சந்தோஷமாக இருந்தாலும் ஸ்லோகங்களை சொன்னான். துன்பத்தின்போதும் மந்திரங்கள் ஓதி மனதை தேற்றிக் கொண்டான். அல்லது மந்திரம் ஓதுதலை கேட்டான்.
மனதை மந்திரங்கள் தொடும்போது மனதின் தன்மையே மாறிவிடுகிறது. மந்திரத்தினுள் இருக்கும் சக்தி மெல்ல மெல்ல வெளிப்பட்டு மனதை வலிமையாக்குகிறது. திறனைக் கூட்டுகிறது. புத்தியை சுறுசுறுப்பாக்குகிறது. பிராண சக்தியை உடல் முழுவதும் பரவச் செய்து புத்துணர்ச்சியை கூட்டுகிறது. மூச்சுகளின் கதியை சீராக்குகிறது. மனதை ஒருமையாக்கி பசுமரத்தாணி போல நினைவுத் திறனை பெருக்குகிறது. அதுமட்டுமல்லாது ஆச்சரியமாக மந்திரங்கள் அஸ்திரம்போல அருவமாகவும் செயல்படுகிறது.
‘உனக்கு திருமணத் தடையா. இதோ இந்த மந்திரத்தை சொல்.’ என்கிறது. அந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல அந்த மந்திரமே அதிசூட்சுமமாக, அந்த மந்திரத்தைச் சொல்பவருக்கேற்றார்போல வரன்களின் மனதைத் தூண்டி யார் மூலமாகவோ அவர்களைச் சந்திக்கச் செய்கிறது. மந்திரங்களுக்கு அத்தனை சக்தி உண்டு. ‘இந்திராய ஸ்வாஹா…’ என்றால் அங்கு இந்திரன் இருந்தாக வேண்டும். இதுதான் வேத விதி. மந்திரத்தின் அடிப்படை கட்டளை. மகாபாரதப் போரில் நிறைய அஸ்திரங்களை மந்திரங்களை சொல்லியே செலுத்தினர்.
கோயிலின் உச்சியில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. குடத்தில் இருக்கும் நீர் சற்று முன்னர்தான் எதிரேயுள்ள குளத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. அதுவரை சாதாரணமாக இருந்த நீர் இப்போது புனித தீர்த்தமாக, கும்பாபிஷேக தீர்த்தமாக மாறிவிட்டது. அதை எடுத்துக்கொள்ள போட்டியே நடக்கிறது. என்ன காரணம்?
அந்த நீரில் வேத மந்திரங்கள் ஏற்றப்பட்டிருக்கிறது. மந்திரங்களை அந்த திரவம் தாங்கியிருக்கிறது. அந்த மந்திரங்களுக்குள் தெய்வம் அமர்ந்திருக்கிறது.
நன்றி: பரத்குமார்। ”ஆன்மிக இதழ்”
Image may contain: 13 people
0
People Reached
0
Engagements
Boost Post
Like

Comment
Share
தெய்வம் எப்படியிருக்கிறது? எல்லாமுமாகவும் இருக்கிறது.
Scroll to top