அக்கா தங்கைகளை ஒரே வீட்டில் அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாமா?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
பலருக்கும் சில சமயத்தில் சில பல சந்தேகங்கள் ஏற் படும் , அது சரியா ? இது சரியா? அல்லது பிழையா? என்று. குழப்பமே வேண்டாம். நண்பர் ஒருவரின் சந்தேகத்துக்கு எங்களின் பதில் இப்படியாக அமைகிறது.
அக்கா தங்கைகளை ஒரே வீட்டில் அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாமா ? இது சரியா? பிழையா? இதுதான் நண்பர் அனுப்பிய சந்தேகம்.
இது சாஸ்திரத்திற்கு விரோதமானது அல்ல என்பதால் இதனை மறுக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் ஒருவருடைய குலம் விருத்தி அடைய பெண்ணின் துணை அவசியம் தேவை. அடுத்தவர்களுடைய குல விருத்திக்காக ஒருவன் தனது பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுப்பது என்பது தானத்திலேயே மிகப்பெரியது என்ற மஹா தானம் என்ற பெயரில் அழைக்கப் படுகிறது.
இத்தனை பெரிய தானத்தை ஒரே குலத்தின் விருத்திக்காக அளிப்பதை விட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அத்தகையை சிறப்பு வாய்ந்த மஹாதானத்தை வெவ்வேறு குலங்களின் விருத்திக்காக பயன்படுத்தும்போது அது மேலும் சிறப்பினைத் தரும்.
வர்த்தனீ குல சம்பதாம் என்று சொல்வார்கள். மனைவி என்பவள் அந்த குலத்திற்கே கிடைத்த மாபெரும் சொத்து. ஒரே வீட்டைச் சேர்ந்த பெண்கள் ஒரேயொரு குலத்தை மட்டும் விருத்தி செய்வதை விட வெவ்வேறு வீட்டிற்குச் சென்று வெவ்வேறு குலங்களை விருத்தியடையச் செய்வது என்பது சாலச் சிறந்தது. அக்கா தங்கைகள் வெவ்வேறு வீட்டில் பிறந்த ஆண்களைத் திருமணம் செய்து கொள்வது விசேஷமான பலனைத் தரும். அதே நேரத்தில் ஒரே வீட்டில் பிறந்த அண்ணன் தம்பிகளை திருமணம் செய்து கொள்வது சாஸ்திரத்திற்கு எதிரானது அல்ல என்பதால் இதனை மறுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே அந்த நண்பரின் கேள்விக்கான பதில் ஆகும். நன்றி.
Image may contain: one or more people
அக்கா தங்கைகளை ஒரே வீட்டில் அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாமா?
Scroll to top