Author : modernhinduculture.com

நல்லூர் கந்தசுவாமி கோயில் – இலங்கை

நல்லூர் கந்தசுவாமி கோயில் – இலங்கை இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்துக் கோயில்களுள் நல்லூர் கந்தசுவாமி கோயில் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள, 12 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமான, நல்லூர் என்னுமிடத்திலுள்ளது. இதன் தோற்றம் பற்றிச் சரியான தெளிவுஇல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்தது என்பதில் ஐயமில்லை. வரலாறு: […]

ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் – இலங்கை

இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் – இலங்கை தல வரலாறு. யானை முகம் மூன்று விழிகளும் நான்ற வாயினையுமுடைய ஞானமே வடிவான விநாயகப் பெருமான் பரராஜசேகரன் என்னும் திருநாமத்துடன் தெய்வீகத்திருவுருவும், வைதீகத்திருவுருவம் மிக்க இணுழவயம்பதியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றார். இவ்வாலயமானது ஆறு(6) நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெருமைக்குரியது.மேலும் அரசபரம்பரையோடு தொடர்புடைய பெருமையுடையது.யாழ்ப்பாண அரசின் சிம்மாசனப் பெயர்களில் ஓன்றான பரராஜசேகரன் என்னும் பெயர்தாங்கி நிற்கின்றது.14,15ஆம் நூற்றாண்டுகளில் யாழப்பாணத்தை ஆரியச்சக்கரவர்த்திகள் ஆண்டுவந்தனர். அவர்களில் பதினோராம் தலைமுறையில் வந்த பரராஜசேகர மன்னன் […]

நகுலேசுவரம் – இலங்கை

நகுலேசுவரம் – இலங்கை மானிடசரீரத்தின் வெளிப்பாடாக ஆலயங்கள் காணப்படுகின்றன. மானிடசரீரமே ஆலயங்களுள் மிகவும் சிறந்தது. அண்டமெங்கும் குடிகொண்டுள்ள தெய்வம், மானிடசரீரத்திலும் வீற்றிருக்கின்றது. இத்தத்துவத்தை சாதாரண அறிவுடையோர் புரிந்துகொள்வது கடினம். சாதாரண மக்களும் இறைத்தத்துவத்தை இலகுவாகப் புரிந்துகொள்ளவே ஆலயங்கள் உருவாகின. ஆன்மீக நிலையில் இரு நிலைகள் காணப்படுகின்றது. ஒன்று அறிவு மேம்பட்டோர் நிற்கும் ஞானநிலை. இந்நெறி நிற்பவர்கள் மிக அரிதாகவே காணப்படுவர். ஏனையோர் கிரியை நெறி சார்ந்து நிற்பவர்கள். மனித நாகரிக வளர்ச்சிப்படியில், மக்களைப்பற்றிச் சிந்தித்த ஞானிகள் கோயில், திருவுருவம், […]

திருக்கேதீச்சரம் – இலங்கை

திருக்கேதீச்சரம் – இலங்கை ஈழத்திலுள்ள கோயில்களைத் தொன்மைச் சிறப்புக் கொண்டவை, பாடல் பெற்றவை, கிராமியக் கோயில்கள் என மூவகையாகப் பாகுபடுத்தலாம். இவற்றுள் தொன்மைச் சிறப்பும், பாடல் பெற்ற திருத்தலமாகவும் விளங்கும் சிறப்பைப் பெற்ற கோவில்களுள் ஒன்றாகப் போற்றப்படுவது திரக்கேதீச்சரம். இலங்கையிலுள்ள மன்னார் என்னும் சிறுதீவு இருபகுதிகளைக் கொண்டது. இவ்விரு பகுதிகளையும் தலைமன்னார் என்றும், கோட்டை மன்னார் என்றும் குறிப்பிடுவர். தலைமன்னார் துறைமுகத்திலிருந்து சுமார் முப்பத்தைந்து கிலோமீற்றர் தூரத்தில், பாலாவித் தீர்த்தக்கரையில் திருக்கேதீச்சரம் என்னும் திருத்தலம் தற்காலத்தில் காணப்படுகின்றது. ஆதியில் மாந்தை, […]

திருக்கோணேஸ்வரம் – இலங்கை

திருக்கோணேஸ்வரம்- இலங்கை வளம் கொழிக்கும் திருகோணமலை மண்ணின் மத்தியில் பண்ணாளர்கள், பாவலர்கள் பலர் வாழும் திருகோணமலையில் கோயில் கொண்ட கோணேசப் பெருமானின் கருணையினை அறியாதவர் இல்லை. இறைவர் : திருக்கோணேஸ்வரர்  இறைவியார் : மாதுமையாள் விருட்சம் :கல்லால மரம் தீர்த்தம் : பாவநாசம் வழிபட்டோர் : இராவணன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் இக்கோயிலின் வரலாறு 3287 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகும். இதற்கு திரிகூடம் என்றும் பெயருண்டு. சுவாமிக்கு விளக்கேற்றுவதற்குப் போதியளவு நெய்யும் திரியும் கிடைப்பதற்கு வழிவகுத்தவர்கள், தாமரைத் தண்டின் நூலெடுத்து […]

முன்னேஸ்வரம் – இலங்கை

முன்னேஸ்வரம் – இலங்கை இத்தலம் கொழும்புவிலிருந்து 82 கி.மீ தொலைவில் உள்ளது. கொழும்புவிலிருந்து வடக்கே A3 நெடுஞ்சாலையில் சிலாபம் (Chilaw) சென்று , கிழக்கில் திரும்பி 7 கி.மீ சென்றால் இக்கோயிலை அடையலாம். புத்தளம் மாவட்டத்தில் உள்ளது. சிலாபத்தில் இருந்து இங்கு செல்ல நகரப்பேருந்து உள்ளது. தலச்சிறப்பு இலங்கையில் சிறப்புப் பெற்ற சிவன்கோயில் ஐந்து. அவை ,முன்னேஸ்வரம், கோணேஸ்வரம், கேதீஸ்வரம், நகுலேஸ்வரம், தொண்டேஸ்வரம் ஆகியவை. இவற்றில் முன்னதாகப் போற்றக்கூடியதாக முன்னேஸ்வரம் இருக்கிறது. புராணவரலாறு: இலங்கையிலுள்ள புராதன சிவாலயங்களுள் காலத்தால் […]

நவராத்திரி

நவராத்திரி, அம்பிகையை அவளது பல்வேறு வடிவங்களில் ஒன்பது இரவுகள் வழிபடும் திருவிழா.

மகா சிவராத்திரி

பங்குனி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இந்து வருடாந்தரக் கணக்குப்படி, மிகப் புனித தினங்களில் ஒன்றாகவும், மிக மங்கலமான நாட்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.

அக்ஷய திருதியை

மகா விஷ்ணுவின் மூன்று அவதாரங்கள் நிகழ்ந்துள்ள திரேதா யுகத்தின் துவக்கம் அக்ஷய திருதியை. அக்ஷய, என்றால் முடிவற்றது என்று பொருள். இதைத் தவறாகப் புரிந்து கொண்டு இக்காலத்தவர் பேராசையுடன் தங்கம் வாங்கிக் குவிக்கின்றனர், இந்த நாளின் பிற சிறப்புகளை மறந்து விட்டனர்.

பாபம்

பாபம் கடவுளின் சட்டங்களை வேண்டுமென்றே மீறுவது அல்லது கடவுளுக்கு எதிராக புரட்சி செய்வது பாபம் என்பதுதான் உலகம் தழுவிய பல சமய மரபுகளின் சித்தாந்தம். உதாரணத்துக்கு, கிறித்தவத்தில் ஒரிஜினல் சின் என்று ஒன்று இருக்கிறது. முதல் பாபம் செய்த ஆதாமுக்குப்பின் வந்த அத்தனை பேரும் அந்தப் பாபத்தால் பீடிக்கப்பட்டிருப்பதாக கிறித்தவம் சொல்கிறது. இது போல் எது பாபம், யார் பாபிகள், எது பாப விமோசனம் என்பது பற்றி உலகத்தில் உள்ள ஏறத்தாழ அத்தனை சமயங்களும் தங்களுக்கு என்று […]

Scroll to top