அக்ஷய திருதியை

அக்ஷய திருதியை

எந்த ஒரு துவக்கத்துக்கும் தகுந்த மிகச் சிறந்த சுபதினங்களில் அக்ஷய திருதியையும் ஒன்று.

சந்திர சூரியர்கள் மிகப் பிரகாசமாகி ருக்கும் விசாக மாதத்தின் மூன்றாம் நாளன்று அக்ஷய திருதியை கொண்டாடப்படுகிறது, மேஷ ராசியுள் சூரியன் பிரவேசிக்கும் காலமும் இதுவே.

மகா விஷ்ணுவின் மூன்று அவதாரங்கள் நிகழ்ந்துள்ள திரேதா யுகத்தின் துவக்கம் அக்ஷய திருதியை. இந்த நாளன்றுதான் பரசுராமர் பிறந்தார். வியாசர் மஹாபாரதத்தை எழுதத் துவங்கிய நாளும் இன்றே.

அக்ஷய திருதியையன்று புனித நதிகளில் வேத மந்திரங்களை ஜபித்தபடி புனித நதிகளில் நீராடுவதும் ஹோமம் வளர்த்து வழிபடுவதும் வழக்கம்.

அக்ஷய, என்றால் முடிவற்றது என்று பொருள். இதைத் தவறாகப் புரிந்து கொண்டு இக்காலத்தவர் பேராசையுடன் தங்கம் வாங்கிக் குவிக்கின்றனர், இந்த நாளின் பிற சிறப்புகளை மறந்து விட்டனர்.

சுபகாரியங்களைத் துவங்க ஏற்ற நாள் இது, இன்று துவங்கிய செயல்கள் சாகும்வரை தொடரும் என்பது நம்பிக்கை.

ஒருவர் தன்னால் இயன்ற அளவு பிறருக்கு பொருளுதவி செய்யவும் தகுந்த நாள் இது- இன்றுள்ளது போல் சொத்து சேர்ப்பதில் மட்டும் குறியாக இருப்பதற்கான நாள் அல்ல. முன்போல் இப்போது தகுதியுள்ள பிராமணர்களுக்கும் பிற வகுப்பினருக்கும் பொருள் வழங்கிக் கொண்டாடுபவர்கள் மிகச் சிலரே உள்ளனர்.

அக்ஷய திருதியை
Scroll to top