கட்டுரை

காகத்துக்கு ஏன் அன்னம் இடுகிறோம்???

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஏன் காகத்துக்கு அன்னம் இடுகிறோம்??? எத்தனையோ பறவைகள் இருக்க ஏன் காகத்திற்கு மட்டும் உணவு வழங்க வேண்டும் ??? அதற்கு காஞ்சி மஹாபெரியவர் அளித்த விளக்கம்: தினமும் காகத்துக்கு அன்னம் இட்டு பின்னர் சாப்பிடும் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். ஆமாவாசையின் போது காகத்துக்கு அன்னமிடும் பலர் இருக்கிறார்கள்! இதன் அர்த்தம் புரியாமல் கேலி பண்ணும் நபர்களும் இருக்கிறார்கள்!!! எத்தனையோ பறவைகள் இருக்க […]

விஜயதசமி- மானம்பு- வாழை வெட்டு – அம்பு போடல் திருவிழா

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம் ·  தெரிந்து கொள்வோம்நண்பர்களே! நன்றி: தியாக. மயூரகிரி சிவாச்சாரியார் , நீர்வேலி , இலங்கை. விஜயதசமி- மானம்பு- வாழை வெட்டு – அம்பு போடல் திருவிழா — இப்பெருவிழா பற்றிச் சிக்கலான சில கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த அளவில் பதில் அளிக்க விழைகிறேன். — 1. இந்த திருவிழா இலங்கையில் மட்டுமா நிகழ்கிறது? இல்லை. இது பாரத தேசமெங்கும் நிகழ்கிறது. அதிலும் ஆகம வழிபாடு நிகழ்கிற […]

ஓம் எனப்படும் பிரணவ மந்திர மகிமையை பார்ப்போம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! இன்று ஓம் எனப்படும் பிரணவ மந்திர மகிமையை பார்ப்போம்! எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலி தான் பிரணவம் என்றழைக்கப்படுகிறது. நம் வாயைத் திறந்து உள்ளிருந்து மூச்சுக் காற்றை வெளியிடும் போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலியானது பிறக்கின்றது. அந்த ஒலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது. இப்படி பிறக்கும் ”ஓம் – ஓம்” என்ற ஒலியை தான் பிரவணம் என்று கூறுகிறார்கள். இந்த […]

பாலிகை பூஜை பற்றி அறிந்து கொள்வோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நவராத்திரி பூஜை வழிபாடுகள் சமயத்தில் பாலிகை பூஜை பற்றி அறிந்து கொள்வோம். ஆகமங்களில் பாலிகை பூஜை மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. அனைத்து யாகங்களிலும் ரோகிணி, கிருத்திகாவுடன் சந்திரனையும், அவரைச் சுற்றிலும் பாலிகைகளில் 12 சூரியரையும் வளர்ச்சியின் அடையாளமாக வழிபடுவது மரபு. திருமணம் முதல் ஆலய வழிபாடுகள், உபநயனம் உட்பட்ட அனைத்து சுபகாரியங்களிலும் வளர்ச்சியின் குறியீடாக முளைப்பாலிகை வைத்து அவரவர் மரபுப்படி பூஜை செய்யும் வழக்கம் உள்ளது. நாம் நன்றாக இருக்கவேண்டும்; ஆரம்பித்த காரியம் […]

ஆலயத்தில் உள்ள கொடிமரம் பற்றிய ஓர் குறிப்பைப் பார்ப்போம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலயத்தில் உள்ள கொடிமரம் பற்றிய ஓர் குறிப்பைப் பார்ப்போம்! கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார். ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள். […]

மஹாளயபட்சம் சில குறிப்புகள்.

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நன்றி:-Balagurusamysarma Gopalakrishna Kurukkal மஹாளயபட்சம் சில குறிப்புகள். ————————————– மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்துவிட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும். • பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு […]

கும்பாபிஷேக குறிப்பு!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கும்பாபிஷேகம் தமிழில் குடமுழுக்கு அல்லது கும்பாபிசேகம் (கும்பாபிஷேகம்) ஒவ்வொரு இந்து கோவிலிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒரு சடங்காகும். இதன்மூலம் உள்ளிருக்கும் கடவுள் சிலைகளுக்கு தெய்வீகத்தன்மை புதுப்பிக்கப்படுகிறது. இந்த குடமுழுக்கு சம்பந்தமாக சில விடயங்களை இங்கு பார்ப்போம் மூலவர் விக்கிரகத்திற்கு அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வார்கள். அஷ்டபந்தன மருந்து ஆனது 12 ஆண்டுகளில் தனது சக்தியை இழந்துவிடும் என்பதால் அதனை […]

தீபத்தை ஏன் ஏற்றுகிறோம்? அதன் பலன்கள் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! தீபத்தை ஏன் ஏற்றுகிறோம்? அதன் பலன்கள் என்ன? ​தினசரி வீட்டில் தீபம் ஏற்றுகிறோம். மங்கல சடங்குகள், பொது நிகழ்ச்சிகள் கூட தீபம் ஏற்றி விட்டுத்தான் தொடங்கப்படுகிறது. அந்த சடங்குகள், நிகழ்ச்சிகள் முடியும் வரை அந்த தீபம் எரிந்து கொண்டிருக்கும். ஒளி அறிவையும், ஞானத்தையும் குறிக்கிறது. இருள் அறியாமையையும், அஞ்ஞானத்தையும் குறிக்கிறது. இறைவனை எல்லா ஞானத்திற்கும் மூலமானவனாகவும், ஒளிமயமானவனாகவும் கருதுகிறார்கள். நமது குடும்பங்களில் அறியாமை என்ற இருளகற்றி ஞானம் என்ற ஒளி பரவ வேண்டும் […]

இணையதளம். www.modernhinduculture.com

மதிப்பு வாய்ந்த நண்பர்களே , அன்பர்களே வணக்கம்!!! எங்களின் www.modernhinduculture.com என்ற இணையதளத்தில் பகிரப்பட்ட ஆன்மீக விடயங்கள் சுமார் 400 கட்டுரைகள் அடங்கிய ஓர் தொகுப்பு நூல் அண்மையில் Modern Hindu Culture நிறுவனர் டாக்டர் சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர் தம்பதிகளின் சதாபிஷேக நிகழ்வின் போது வெளியிடப் பட்டு பலரின் கைகளில் அந்த தொகுப்பு நூல் சென்றடைந்தமை நாம் அறிந்தது!!! மகிழ்ச்சி!!! இப்போது மேலும் பல ஆன்மீக தகவல்கள் www.modernhinduculture.com இணையதளத்தில் பகிரப… See more

இறைவனுக்கு சோடசோபசாரம் செய்வது என்கிறார்களே… அப்படி என்றால் என்ன?

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். July 20  ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே ! இறைவனுக்கு சோடசோபசாரம் செய்வது என்கிறார்களே… அப்படி என்றால் என்ன? மஹோத்சவம் மற்றும் பிரதான வழிபாட்டு நேரங்களில் இந்த சோடோபசார வழிபாடு மிக மிக முக்கியத்தும் பெறுகிறது!!! உபசாரம் என்பது இறைவனது வழிபாட்டில் சிறப்பு மிக்கதோர் அம்சமாகும். இறைவனை அரசனாக நினைத்து நாம் செய்யும் பணிவிடைகள். இதனை ஐந்து, பத்து, பதினாறு, அறுபத்துநான்கு என விவரிக்கலாம். இவற்றுள் சோடசோபசாரம் […]

Scroll to top