தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஆலய வழிபாடுகளிலும் வேறு பல பூஜை நிகழ்வுகளிலும் ஏற்றப்படும் விளக்குகள் பற்றி அறிவோம்!
இப்போதுள்ள இந்த நவ நாகரீக காலத்தில் பீங்கான் விளக்குகள் , கண்ணாடி விளக்குகள் என்று விதம் விதமாக வியாபாரத்துக்கு வந்துள்ளதை நீங்கள் காணலாம்! இவை அலங்கார தேவைகளுக்கு மட்டுமே! பூஜை தேவைகளுக்கு பயன் படுத்த முடியாதவை!
ஆலய வழிபாடுகள், பூஜைக்கு என்று சான்றோர்களினால் சொல்லபட்ட விதிகள் உண்டு நண்பர்களே! விதியை மீறி ஒன்றை செய்த பின் கடவுள் தண்டனை, தெய்வ குற்றம் என்று பயப்பட வேண்டாமே!!!
முதலில் தெய்வ தோஷம் என்ற சொற்களை மனத்தில் இருந்து நீக்குங்கள். கடவுள் மிகவும் அன்பானவர். நம் கர்மவினைகள் நீங்கிட பல சூழ்நிலைகளை அமைத்து, அதிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதும் அவரே.
தீபமானது, எள்ளில் இருந்து கிடைக்கும் நல்லெண்ணெய், பசுவிலிருந்து கிடைக்கும் நெய் போன்றவற்றால் ஏற்றப்படுவது. இந்த தீபங்களை மண், பித்தளை, வெண்கலம், வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களால் உருவான விளக்குகளில் ஏற்றுவதே சிறப்பு. மண் விளக்குகளையும் ஒருமுறை மட்டுமே ஏற்ற வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
பீங்கான் விளக்கு போன்றவற்றை வீடுகளில் அழகுக்கு வைத்துக்கொள்ளலாமே தவிர தீபம் ஏற்ற பயன் படுத்தக் கூடாது. நாம் செய்யக்கூடிய பூஜைகள் நமக்கும் பிற உயிர்களுக்கும் நன்மை செய்யக் கூடிய ஆற்றல்கொண்டவை.
பூஜை முறைகள் நம்மையும் இறைவனையும் இணைக்கக் கூடிய வழிமுறைகளைக் கொண்டவை.
எனவே சாஸ்திரங்களில் சொல்லப்பட்டபடி நாம் ஒரு காரியம் செய்வது என்பது, நல்ல தொலைபேசியில் ஒருவரைத் தொடர்புக் கொள்வதைப் போன்றது; சிக்கல் இருக்காது. ஆகவே நம் ரிஷிகள், ஞானிகள் கூறியதைப் போல நம் வாழ்க்கை முறையைப் பின்பற்றினால், எதிலும் அச்சம்கொள்ளத் தேவையில்லை. வாழ்வும் சிறப்புடன் அமையும்.
சிறப்புடன் வாழ்வோம்!!!
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
ஆலய வழிபாடுகளிலும் வேறு பல பூஜை நிகழ்வுகளிலும் ஏற்றப்படும் விளக்குகள் பற்றி அறிவோம்!