ஆலய வழிபாடு முறைகளை, ஆகம வழிபாட்டு விதிகளை அறிவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
ஆலய வழிபாடு முறைகளை, ஆகம வழிபாட்டு விதிகளை அறிவோம்!
உதாரணமாக பக்தர்கள் சிலர் நந்தி எம்பருமானின் காதில் ஏதும் சொல்வார்கள், சிலர் ஆலய விக்கிரகத்தை தொட்டு வழிபாடு செய்வார்கள். இவை தவறு!!!
ஆகமங்களில் இறைவனை எப்படி வழிபட வேண்டுமென்ற விளக்கங்கள் பல உள்ளன. ஒரு கைபேசியில் நாம் ஒருவரிடம் பேசுவதற்கு, இந்த முறையில் வைத்துப் பேசவேண்டும் என்று நியதி இருக்கும். அப்படியே நாமும் பயன்படுத்துவோம். அதேபோன்று விதிகள் நிறைந்தவைதான் நமது தர்மங்கள்.
விதிகளில் அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ற வேறுபாடுகள் இருக்கலாம். ஒவ்வொருவரும் உரிய விதிகளைப் பின்பற்றி வழிபடவேண்டும்.
அவ்வகையில், நந்தியம்பெருமானின் காதுகளில் நம்முடைய வேண்டுதல்களைக் கூறுவது என்பது குறித்து ஆகமங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே விதிக்காததைச் செய்வது என்பது பலன் அளிக்காது.
நமது அறியாமையால் ஆகமங்களுக்கு எதிரான காரியங்கள் நடைபெற்றால், அங்குள்ள தெய்வச் சாந்நித்தியம் குறைந்து போகும்; அதற்கு நாம் காரணமாகி விடுவோம். இதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நம்மைப் பாதிக்கும்; சந்தேகம் வேண்டாம். அனைத்து ஜீவன்களுக்கும் நடைபெறும் வழிபாட்டை நமது அறியாமையால் மாற்றுவது தவறு. ஆகமங்கள் வழியே பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வ வடிவங்களைக் கண்டிப்பாகத் தொடக்கூடாது.
சிலர் அவர்கள் குடும்பத்துக்கென உருவாக்கிய குல தெய்வ ஆலயங்கள் மற்றும் பஜனை மடங்கள் போன்ற வற்றில், அங்குள்ள தெய்வங்களை அந்த ஆலயத்தை நிர்வகிக்கும் பெரியவர்கள் அனுமதித்தால் தொட்டு வழிபடலாம். ஆனால் கோவில்களில் அது ஏற்புடையதல்ல !!!
நம் வீட்டில் உள்ள பணப் பெட்டியை நாம் தொடலாம். வேறொருவர் வீட்டில் உள்ள பணப் பெட்டியையோ, வங்கியில் உள்ள பணப் பெட்டகத்தையோ நாம் தொடு வது தவறு. ஆகவே, ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வ வடிவங்களைத் தொடுவது கூடாது.
முறைப்படி வழிபடுவோம்! பலன் பெறுவோம்!!!
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆகம மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
ஆலய வழிபாடு முறைகளை, ஆகம வழிபாட்டு விதிகளை அறிவோம்!
Scroll to top