ஆலயம் சென்று வழிபடுவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
ஆலயத்துக்கு சென்று வழிபடுவோம்!!!
இன்றைய கால கட்டம் சவால் நிறைந்தது குறிப்பாக பெற்றோர்களுக்கு!!!
பிள்ளைகளுக்கு வேறு வேறு புலன்கள் மடை மாற்றங்கள் , கூடாத நட்புகள், தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சி அவற்றை சரியான முறையில் பயன் படுத்தாமல் பிழையான வழியில் செயல்படல் இப்படி இன்னோரன்ன காரணங்கள் ஆலயங்களுக்கு செல்ல விடாமல் தடுக்கின்றன! பெற்றோர்கள் இவற்றை கணக்கில் எடுத்து பிள்ளைகளை ஊக்கப்படுத்தி ஆலயங்களுக்கு சென்று வழிபடும் சூழலலை உருவாக்க வேண்டும் நண்பர்களே அன்பர்களே!!!
ஆலயம் தொழுவது சாலவும் நன்று. ஆலயத்துக்குச் சென்று இறைவனைத் தொழும் போது இனம்புரியாத மகிழ்ச்சியும் பரவசமும் உண்டாகும். ஆம் நாம் நம்மை மறந்து இறையிடம் லயிக்கும் இடம் ஆலயம்; நம் ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம். அங்கே செய்யப்படும் பூஜைகள் அனைத்தும் உயிர்களின் நன்மைக்காக செய்யப் படுகின்றன.
கோயிலுக்கு யார் போகிறார்கள், போக வில்லை என்பதெல்லாம் கணக்கில்லை. அன்றாட பூஜைகள் நடக்கும்போது அது சகல ஜீவன்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. நாடும் மக்களும் சுபிட்சமாக இருக்கவே ஆலயங்கள் இயங்குகின்றன.
சூழல்கள் நமக்குச் சாதகமாக இருக்கும் வேளைகளில் நாம் ஆலயங்களுக்கு சென்று வருவோம். இயற்கைப் பேரிடர், சில சடங்குகள், கடுமையான நோய் பரவும் காலம், போர்ச் சூழல் போன்ற வேளைகளில் நாம் கோயிலுக்குச் செல்ல முடிவதில்லை. சில தருணங்களில் சில காரணங்களால் விழாக் காலங்களில்கூட ஆலயங்களுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகலாம்.
கோயிலுக்கு செல்ல முடியாத இடர்கள் ஏதும் ஏற்படும் காலங்களில், ஆலயத்துக்குச் சென்று வழிபட முடியாத பட்சத்தில் வீடுகளிலேயே நாம் விதவிதமாக பூஜைகள் செய்து வழிபடலாம். அந்த உரிமையை நமது தர்மம் சில வரையறைக்கு உட்பட்டு அனுமதித்து உள்ளது. அன்று என்ன விழாவோ அந்த நாளுக்குரிய ஆராதனைகளை வீட்டிலேயே செய்து வழிபடலாம்.
உதாரணமாக சிவராத்திரி விழாவுக்கு ஆலயம் செல்ல முடியவில்லை , என்றால் நான்கு காலமும் பூஜை செய்யலாம். ஈசனின் படத்துக்கு அந்தந்த காலத்துக்குரிய புஷ்பங்கள், தீப, தூபங்கள் சமர்ப்பித்து வணங்கலாம். அந்தந்த வேளைக்குரிய பதிகங்களைப் பாடி, நைவேத்தியங்கள் சமர்ப்பித்துச் சிவராத்திரியைக் கொண்டாடலாம்.
மனம் அமைதி மற்றும் மகிழ்வடையவே பூஜைகள் உருவாக்கப்பட்டன. அவற்றை உங்கள் வீட்டிலும் செய்து பலன் அடையலாம்.
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள ஆன்மிக மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com

 

ஆலயம் சென்று வழிபடுவோம்!
Scroll to top