தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
இறைவழிபாட்டின் மகத்துவம் !
இப்பகுதியில் கடவுள் வழிபாடுகளின் முக்கியத்துவம் பற்றியும் நல்ல பல ஆன்மீகக் கருத்துகளையும் ஆன்மீகப் பெரியார்கள் சொல்வதை நாம் திரட்டி தொகுத்து பதிந்து வருகிறோம்! நண்பர்கள் பலரும் அவற்றை படித்து பார்த்து வருவது நாம் அறிந்தது!!!
முதலில் இறைவனை நாம் ஏன் வழிபடவேண்டும்’ என்பதற்கான பதிலைத் தெரிந்து கொள்வோம்!! நீங்கள்தான் இறைவனை வழிபட வேண்டும்.
`வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல’ என்கிறார் திருவள்ளுவர். அதாவது, எவ்வித வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாத இறைவனை நாம் வழிபட்டால், நம் இன்னல்கள் போக்கப்படும் என்பது, அவரின் திருவாக்கு. ஆக, கடவுளை வழிபடுவது நம்முடைய இன்னல்களைப் போக்கிக் கொள்ளவே; நம் நன்மைக்காகவே அவரை வேண்டிக் கொள்கிறோம் என்பதை முதலில் உணர்ந்து தெளியவேண்டும்!!!
நல்ல நேரத்தில் செய்யப்படும் வேண்டுதலானது முழுமையான பலனை, கடவுளின் தொடர்பை அளிக்கும் வல்லமை பெற்றது. எனவே நம்முடைய சாஸ்திரங்கள் காலங்களை வகுத்து, அதன்படி வழிபடவேண்டும் என்று கட்டளை இட்டிருக்கின்றன. எல்லாம் வல்ல பரம்பொருள் நாம் பக்தியுடன் இருந்து மேன்மை அடைய பல வடிவங்களில் அருள்பாலித்து வருகிறார்.
`
இந்தக் காலத்தில், இந்த தெய்வத்தை, குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்து, இந்தத் திரவியங்களால் வழிபடவேண்டும்’ எனும் வழிகாட்டலின்படி வழிபடும்போது, அந்த வழிபாடு நமக்குப் பெரிய ஆற்றலைத் தருகிறது. நாட்டுக்கு நாடு நேர மாறுபாடுகள் உண்டு. இங்கு பகல் என்றால் அங்கு இரவு என்று அமையும். செய்வதை நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.
எனவே காலத்துக்கு உட்பட்டு கடவுளை வழிபடுவது சிறந்த பலன்களை அளிக்கும். இன்னும் அந்ததந்த விசேட தினங்களில் அந்ததந்த நட்சத்திரங்களில் வழிபடுவது மேலும் சிறப்பைத் தரும்! இதை நம் முன்னோர்கள் அனுபவத்தில் அறிந்து அளித்துள்ளனர். அவர்களின் வழிகாட்டல்களை நாமும் அனுசரித்துப் பலனடைவோம்.
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
இறைவழிபாட்டின் மகத்துவம் !