கட்டுரை

ஆன்மிகம் – வளர்ச்சி

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: என்னதான் சிலர் எப்படி என்றாலும் வழிபாடுகளையும்,சடங்குகளையம் ,சம்பிரதாயங்களையும் தம் மனம் போன போக்கில் விமர்சனம் செய்தாலும் ,ஆன்மிகம் என்பது வளர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆன்மிகம் ஆன்மிகம்தான். ஆன்மிகம் என்பது இந்த உலகில் இருக்கும் வரை சம்பிரதாயமும் சடங்கும் என்றென்றும் நிலைத்திருக்கும். நமது தேசத்தின் ஆணிவேரே அன்பும் ஆன்மிகமும்தான். அன்பு இருக்கும் இடத்தில் ஆன்மிகம் என்பது தானாக இடம்பிடித்துவிடும். அதனால்தான் அன்பே சிவம் என்றார்கள். ஆங்கிலத்தில் love is god என்கிறார்கள். எங்கெல்லாம் உண்மையான […]

எல்லாம் வல்லவிநாயகபெருமானின் முப்பத்திரெண்டு (32) திருவுருவங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் இங்கு காண்போம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே இன்று எல்லாம் வல்லவிநாயகபெருமானின் முப்பத்திரெண்டு (32) திருவுருவங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் இங்கு காண்போம். 1.ஸ்ரீபால விநாயகர் “ குழந்தை வடிவம், யானைத்தலை; பொன்னிற மேனி; நான்கு கைகளில் ஒன்றில் வாழைப்பழம்,ஒன்றில் மாம்பழம்,ஒன்றில் கரும்பு, ஒன்றில் பலாப்பழம், துதிக்`கை’யில் அவருக்கு பிடித்த கொழக்கட்டை. 2.ஸ்ரீ தருண விநாயகர்: இளமை பொங்கும் அழகிய இளைஞனாக, ஒடிந்த தந்தம், விளாம்பழம், கரும்புத்துண்டம், அங்குசம், பாசம், நெற்கதிர், நாவற்பழம், மோதகம் தாங்கிய எட்டு கைகளும் கொண்ட சிவந்த […]

ஆவாகனம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நன்றி: தியாகராசா அவர்கள். தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா, ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor) இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம், Modern Hindu Culture.Org. www.modernhinduculture.com    

பெண்கள் சிலர் தங்கத்தில் கொலுசு அணிந்திருப்பார்கள். அது தவறான செயலாகும்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இன்று சில இடங்களில் அவதானித்து இருப்பீர்கள், பெண்கள் சிலர் தங்கத்தில் கொலுசு அணிந்திருப்பார்கள். அது தவறான செயலாகும். பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம் சொல்வது என்ன‌? உண்மையில், பெண்கள் தங்கத்தில் கொலுசு செய்து அணிந்துகொள்ளக் கூடாது என்றே சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. ஜோதிட நூல்களும் இதையே வலியுறுத்துகின்றன. நம், உடலின் உறுப்புக்களை நவக்கிரக ரீதியாக இணைத்துப் பார்க்கச் சொல்லி வலியுறுத்துகிறது ஜோதிட சாஸ்திரம். அதாவது நவக் கிரகங்களில் ஒன்றான சூரியனை, […]

திருமகள் குபேரனுடன் தொடர்புடைய எட்டு கருவூலங்களுக்குத் தலைமை தெய்வமாகத் திகழ்கிறாள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருமகள் குபேரனுடன் தொடர்புடைய எட்டு கருவூலங்களுக்குத் தலைமை தெய்வமாகத் திகழ்கிறாள் என்று மார்க்கண்டேய புராணம் சொல்கிறது. இந்த எட்டு கருவூலங்களையும் எட்டு திருவுருவங்கள் கொண்டு காத்து வருகிறாள். அவையே அஷ்டலட்சுமி வடிவங்கள். தன லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, விஜய லட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, கஜ லட்சுமி, வித்யா லட்சுமி ஆகிய இந்த எட்டு வடிவங்களையும் மனத்தில் தியானித்து வழிபட வாழ்வில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும். லட்சுமி கடாட்சம்!

ஆடி மாதம், அம்மன் மாதம் என்று சொல்வார்கள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆடி மாதம், அம்மன் மாதம் என்று சொல்வார்கள். அம்பாளின் அனுக்கிரகம் பெற மிக உகந்த மாதம். இந்த சந்தர்ப்பத்தில் அம்பாளின் பெருமைகளில் சிலவற்றை இங்குதெரிந்து கொள்வோம் நண்பர்களே! அம்பிகைசதுராத்மாவாக இருக்கிறாள். ஆத்மோபதிஷத்தில் ஆத்மா,அந்தராத்மா, ஞானத்மா, பரமாத்மா என்ற நான்கு விதமாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நான்கு ஆத்ம ஸ்வரூபமாக இருப்பவளேதேவி. நான்கு வேதங்களை நான்கு முகமாகக் கொண்ட இவளைநான்கு முக தேவியாக சிதம்பரம் தில்லைக் காளி ஆலயத்தில் காணலாம். அன்னை ஸாம தான, பேத, […]

எதை எடுத்தாலும் மூட நம்பிக்கை என்று எள்ளி நகையாட முடியாது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! எதை எடுத்தாலும் மூட நம்பிக்கை என்று எள்ளி நகையாட முடியாது. நம்மவர்களே சிலசமயம் சரியான தெளிவு இல்லாமல் பேசுவதை பார்த்திருக்கிறோம்! சகுனத்தடை என்பதால்தான். சகுனம் என்பது நடைபெற உள்ள நிகழ்விற்கான குறிகாட்டி என்று எடுத்துக் கொள்ளலாம். வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது கால் இடறினாலோ, வாயிற்படியில் தலையில் இடித்துக் கொண்டாலோ, நடையில் தடுமாற்றம் உண்டானாலோ அதனை சகுனத் தடையாகச் சொல்வார்கள். இதுபோன்ற சகுனங்களை மூடநம்பிக்கை என்று ஒதுக்க முடியாது. உண்மை நிலையை யோசித்துப் பாருங்கள். […]

‘உபாகர்மா ‘ என்றால் ஆரம்பம் என்பது பொருள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ‘உபாகர்மா ‘ என்றால் ஆரம்பம் என்பது பொருள். வேதம் கற்கத் தொடங்கும் நாள் என்பதால், ‘உபாகர்மா’ எனப்பட்டது. இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடி புதிதாகப் பூணுால் அணிந்து, வேதத்தை படிக்கத் தொடங்குவர். தற்காலத்தில் கோவிலில் ஒன்று கூடி இந்த சடங்கை நடத்துகின்றனர். இன்று, வேத கால ரிஷிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தர்ப்பணம் செய்வர். ரிக்வேதிகள் ஆவணி திருவோண நட்சத்திரத்திலும், யஜுர் வேதிகள், ஆவணி பவுர்ணமியன்று உபாகர்மம் செய்வர். அதாவது ரிக்வேதிகள் நட்சத்திரத்தை […]

பூர்ண கலசம் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்,

பூர்ண கலசம் பற்றி சற்று விரிவாக பார்ப்போம், அறிவோம் நண்பர்களே! சமய வழிபாட்டில் நிறைகுடம் எனப்படும் பூர்ண கலசம் தலையாய இடத்தைப் பெற்றுள்ளது. தமிழில் நிறைகுடம் என்பது முக்காலத்தையும் உணர்த்துவதாகும். இது நிறைந்திருந்த குடம், நிறைந்திருக்கும் குடம் , நிறையப் போகிற குடம் என்னும் முன்று காலத்தையும் குறிப்பதாகும். இதில் கலசம் எனப்படும் குடம். அதன் மீது நெருக்கமாக குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றப்படும் நூல். அதன்மீது அலங்காரமாக அணிவிக்கப்படும் நூல், கலசத்துள் இடப்படும் சுக்கிலம் எனப்படும் தாதுப் […]

கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்று பலவாறாக கொண்டாடுகிறோம், இரண்டும் கண்ணனின் பிறந்த தினம்தான் ,

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்று பலவாறாக கொண்டாடுகிறோம், இரண்டும் கண்ணனின் பிறந்த தினம்தான் , நண்பர்கள் பலர் இந்த இரண்டையும் வைத்து குழம்புவதையும் சில பல இடங்களில் பார்த்தோம். நண்பர்களே சற்று விளக்கமாக பார்த்து அறிந்து கொள்வோம். ` பொதுவாக கோகுலாஷ்டமி என்று நாம் கொண்டாடுவோம். அதேபோன்று அடுத்த ஆவணி மாதம் வைணவர்கள் தங்களின் பாஞ்சராத்ர ஆகமப்படி ஸ்ரீ ஜயந்தி கொண்டாடுகிறார்கள். இது அவர்களுக்கென்று இருக்கும் ஆகமங்களின் அடிப்படையில் காலம் காலமாக அவர்கள் […]

Scroll to top