தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஆடி மாதம், அம்மன் மாதம் என்று சொல்வார்கள். அம்பாளின் அனுக்கிரகம் பெற மிக உகந்த மாதம். இந்த சந்தர்ப்பத்தில் அம்பாளின் பெருமைகளில் சிலவற்றை இங்குதெரிந்து கொள்வோம் நண்பர்களே!
அம்பிகைசதுராத்மாவாக இருக்கிறாள்.
ஆத்மோபதிஷத்தில் ஆத்மா,அந்தராத்மா, ஞானத்மா, பரமாத்மா என்ற நான்கு விதமாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நான்கு ஆத்ம ஸ்வரூபமாக இருப்பவளேதேவி. நான்கு வேதங்களை நான்கு முகமாகக் கொண்ட இவளைநான்கு முக தேவியாக சிதம்பரம் தில்லைக் காளி ஆலயத்தில் காணலாம். அன்னை ஸாம தான, பேத, தண்டம் என்கிற நான்கு வித உபாய வடிவாக உள்ளவள். பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ என்ற நான்கு வாக்காக அம்பிகை விளங்குகிறாள். நாம் பேசுவதற்கு அம்பிகையின்அருள்இல்லையேல் ஊமைதான்.
மூலப் பரம்பொருள் உலக உயிர்களுக்குஅருள்புரியும் போது நான்கு வடிவங்களைக் கொண்டு அருள் புரிகின்றது. இதற்குச் சதுர்த்த வடிவங்கள் என்று பெயர். சைவர்கள் ஆதிசிவமானது உயிர்கள் உய்யும் பொருட்டு சிவபெருமான், உமை, விநாயகர், முருகன் என்ற நாற்பொருளாக வெளிப்பட்டு அருள் பாலிக்கின்றது என்பர்.
வைணவர்கள் மகாவிஷ்ணுவின் நான்கு வடிவங்களாக வாசுதேவன், அச்சுதன், மாதவன், கேசவன் என்ற வடிவங்களைக் கூறுவர். சூரியனைத் தலைவனாகக் கொண்டவர்கள் பாஸ்கரன், பானுமூர்த்தி, ஆதித்யன், ரவி என்கின்ற நான்கு திருவடிவங்களைத் தாங்கி, வந்து மகாசூரியன் அருள்பாலிக்கின்றான் என்பர்.
இதுபோன்ற சிவசக்தியும்நான்கு வகை வடிவமாகத் திருவுருவம் தாங்கி அன்பர்களுக்கு அருள் பாலிக்கின்றாள். சிவபெருமானின் அருளே, பெண் வடிவங்கொண்டு வெளிப்பட்டு பராசக்தியாக அருள்கின்றாள்.பராசக்தி சிவபெருமானின் இடப்புறத்தில் வீற்றிருக்கும் போது ‘பவானி’ என்று பெயர்பெறுகிறாள்.
அச்சக்தியே ஆண்வேடம் தாங்குகையில் விஷ்ணு என்று அழைக்கப்படுகிறாள். அதுவே பெண் உருவம் கொள்ளும்போது ‘வைஷ்ணவி’ என்று அழைக்கப்படுகிறாள். அவளேஅசுரர்கள் மீது கோபங்கொண்டு விளங்குகையில் ‘காளி’ என்றழைக்கப்படுகிறாள். சமர்களத்தில் போரிட்டு வெற்றிச் செல்வியாகத் திகழ்கையில் ‘துர்கை’ என்றழைக்கப்படுகிறார். இந்த நான்குவடிவங்களே தேவியின் சதுர்த்த வடிவங்களாகும்.
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
ஆடி மாதம், அம்மன் மாதம் என்று சொல்வார்கள்.