தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
எதை எடுத்தாலும் மூட நம்பிக்கை என்று எள்ளி நகையாட முடியாது. நம்மவர்களே சிலசமயம் சரியான தெளிவு இல்லாமல் பேசுவதை பார்த்திருக்கிறோம்!
சகுனத்தடை என்பதால்தான். சகுனம் என்பது நடைபெற உள்ள நிகழ்விற்கான குறிகாட்டி என்று எடுத்துக் கொள்ளலாம். வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது கால் இடறினாலோ, வாயிற்படியில் தலையில் இடித்துக் கொண்டாலோ, நடையில் தடுமாற்றம் உண்டானாலோ அதனை சகுனத் தடையாகச் சொல்வார்கள். இதுபோன்ற சகுனங்களை மூடநம்பிக்கை என்று ஒதுக்க முடியாது.
உண்மை நிலையை யோசித்துப் பாருங்கள். வெளியே ஒரு வேலையாக செல்லும்பொழுது கால் இடறுவது, தலையில் இடித்துக் கொள்வது, நடையில் தடுமாற்றம் முதலான நிகழ்வுகள் வெளியில் செல்பவரது கவனக்குறைவால்தான் நிகழ்கிறது. அதே கவனக்குறைவுடன் இருந்தால் அவரால் அந்த வேலையை சரிவர செய்ய இயலாது. கவனக்
குறைவினை சரி செய்வதற்காகவும், மனதளவில் அவர் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் வீட்டிற்குள் திரும்ப அழைத்து அமரச் செய்து நீரை அருந்துங்கள் என்கிறார்கள். குடிக்கின்ற நீர் மனதை சாந்தப்படுத்தும். தண்ணீர் என்பது கிரஹங்களில் சந்திரனின் ஆதிக்கத்தைப் பெற்றது.
அந்தச் சந்திரனையே மனோகாரகன் என்று அழைப்பார்கள். ‘ஔஷதீனாம் அதிபதி:’ என்று சோமனைச் சுட்டிக் காட்டுகிறது வேதம். ஔஷதி என்றால் மருந்து. மருந்துகளுக்கெல்லாம் அதிபதி சோமன். அந்த சோமனின் பிரசாதமான தண்ணீரைப் பருகிவிட்டுச் செல்லும்போது நம் உடம்பில் உள்ள குறைகள் காணாமல் போகின்றன. தண்ணீரை அருந்திவிட்டு வெளியில் கிளம்பும்பொழுது மனமும் சாந்தமாய் இருக்கிறது. வெளியில் சென்று செய்துமுடிக்க வேண்டிய பணியும் வெற்றி பெறுகிறது.
நன்றி: ஹரிபிரசாத் .
எதை எடுத்தாலும் மூட நம்பிக்கை என்று எள்ளி நகையாட முடியாது.