கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்று பலவாறாக கொண்டாடுகிறோம், இரண்டும் கண்ணனின் பிறந்த தினம்தான் ,

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்று பலவாறாக கொண்டாடுகிறோம், இரண்டும் கண்ணனின் பிறந்த தினம்தான் , நண்பர்கள் பலர் இந்த இரண்டையும் வைத்து குழம்புவதையும் சில பல இடங்களில் பார்த்தோம்.
நண்பர்களே சற்று விளக்கமாக பார்த்து அறிந்து கொள்வோம்.
`
பொதுவாக கோகுலாஷ்டமி என்று நாம் கொண்டாடுவோம். அதேபோன்று அடுத்த ஆவணி மாதம் வைணவர்கள் தங்களின் பாஞ்சராத்ர ஆகமப்படி ஸ்ரீ ஜயந்தி கொண்டாடுகிறார்கள். இது அவர்களுக்கென்று இருக்கும் ஆகமங்களின் அடிப்படையில் காலம் காலமாக அவர்கள் கொண்டாடி வருவது.
ஆவணி மாதம் வரும் தேய் பிறை அஷ்டமியில் இதே கோகுலாஷ்டமியைக் கொண்டாடுவதில் ஒரு சிறு பிரச்னை உள்ளது. அப்போது பித்ருக்களை வழிபடும் மகாளயபட்சம் தொடங்கிவிடுகிறது. மகாளய பட்சம் என்பது அனைவரும் முன்னோர் வழிபாடு செய்யும் காலம். மகாளய பட்சத்தின் 15 நாள்களும் பித்ரு ஆராதனைக்கே முன்னுரிமை வழங்குவது வழக்கம். ஆவணியில் வரும் ரோகிணி, அஷ்டமியைக் கணக்கிட்டால் அதனிடையே மத்யாஷ்டமி எனப்படும் பித்ரு வழிபாட்டுக்குரிய முக்கியமான நாள் வருகிறது. பித்ரு வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தர வேண்டிய நாளில் நாம் இந்தக் கோகுலாஷ்டமியைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனால் பெருமாளை வழிபடுபவர்கள் இந்த ஆவணி மாத தேய் பிறை, ரோகிணி நட்சகத்திரம் பொருந்திய நாள் கிருஷ்ண ஜெயந்தி என்று வழிபடுவது காலாகாலமாக நடைபெறும் விடயம்.
அது பித்ரு வழிபாட்டுக்கு இடையூறாகிவிடக் கூடாது என்பதன் காரணமாகவே நாம், அதாவது , சிவனை,விநாயகரை, முருகனை,அம்பாளை வழிபடும் நாம் , அன்றைய நாளில் கோகுலாஷ்டமி வழிபாடு செய்வதைத் தவிர்க்கிறோம். ஆனபடியினால் ஆவணி அவிட்டம் முடிந்து வரும் தேய் பிறை அட்டமியில் கோகுலாஷ்டமியை கொண்டாடுகிறோம்.,
பெரியவர்கள் வகுத்திருக்கும் காலங்காலமான சாஸ்திரப்படியே நாம் பண்டிகைகளைக் கடைப்பிடித்து வருகிறோம்.
வழக்கமாக ஆவணி அவிட்டம் முடிந்து வரும் தேய் பிறை அட்டமியில் கோகுலாஷ்டமி என்பது பல நூறு ஆண்டுக்கால வழக்கம்.
ஆகவே நண்பர்களே, இவற்றை எல்லாம் ஆலோசித்து நீங்களே முடிவு செய்து கோகுலாஷ்டமி கொண்டாடுங்கள். ஆனால், கொண்டாடாமல் மட்டும் விட்டுவிட வேண்டாம். எதையும் பிரித்துப் பார்ப்பதை விட்டுவிட்டு அவரவர்களுக்கு எது சாஸ்திரமோ அதைப் பின்பற்றுங்கள், கொண்டாடுங்கள்!!!
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர்,( E Magazine Editor)
இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனம்.
Modern Hindu Culture.Org
www.modernhinduculture.com
கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்று பலவாறாக கொண்டாடுகிறோம், இரண்டும் கண்ணனின் பிறந்த தினம்தான் ,
Scroll to top