கட்டுரை

தேங்காய் வைத்து கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்துகொள்வோம்.

பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் அடிக்கடி தோன்றும். அந்த வகையில கும்பம் வைக்கும்போது ஏன் தேங்காயை கும்பத்தின் மீது வைக்கிறோம்? வேறு காய்களோ ,பழங்களோ ஏன் வைப்பதில்லை என்பதன் விளக்கத்தை தருமாறு அன்பர் ஒருவர் கேட்டுள்ளார். ஆன்மீகப் பெரியவர்கள் இதுக்கு சொன்ன விளக்கத்தை பார்ப்போம்!!! முதலில் கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்துகொள்வோம். மனிதன் உயிர்வாழத் தேவையானது தண்ணீர். நீர் இன்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அந்த நீரில் இறைவனை ஆவாஹனம் செய்வதற்காக […]

இறைவனுக்கு எப்படி நன்றி கூற வேண்டும்?

எங்களை இப்படி நல்லபடியாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு எப்படி நன்றி கூறவேண்டும்? தடுக்கி விழப் போன எங்களை யாரும் கை கொடுக்க எத்தனித்தால் உடனே நன்றி என்கிறோம். இறைவனுக்கு??? நிவேதனம், பிரசாதம் என்பதெல்லாம் என்ன? நமக்காக நன்மைதரும் வேலையை ஒருவர் செய்தாரென்றால் அதற்காக மகிழ்ந்து நாம் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்; அல்லது ஏதேனும் அன்பளிப்பை அவருக்கு அளித்து நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம். ஏன், வீட்டிலேயே சின்னப் பையன்களுக்கு அவர்கள் ஏதாவது வீட்டுவேலையை சிறப்பாகச் செய்தார்களென்றால், சாக்லெட், […]

புது வீட்டுக்கு ஏன் பால் காய்ச்சுகிறோம்?

புது வீட்டுக்கு போகிறோம், பால் காய்ச்சுகிறோம் என்று சொல்வோம். இந்த பால் காய்ச்சும் வைபவத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? இளைய சமுதாயத்தினர் இவற்றை அறிந்து கொள்ள வேண்டும்! கடவுளை வழிபடுவோர் நிச்சயம் இதை புரிந்து கொள்வார்கள் நண்பர்களே!!! ‘க்ஷீரே சுக்ராய நம:’ என்கிறது வேத மந்திரம். க்ஷீரம் என்ற வார்த்தைக்கு பால் என்று பொருள். பசும்பாலினில் சுக்கிரனின் அம்சம் நிறைந்துள்ளது என்பது இந்த வாக்கியத்தின் அர்த்தம். ஆனந்த வாழ்வினையும், குறைவில்லாத பொருட்செல்வத்தினையும் தருகின்ற கிரஹம் சுக்கிரன். ஜோதிடவியல் […]

எப்படி அர்ச்சனை செய்கிறோம்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஏதேனும் ஒரு கோரிக்கையை வைத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்பவர்கள் தங்களது கோத்திரம், நட்சத்திரம், ராசி மற்றும் பெயரைச் சொல்லி சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்வர். அதாவது, தங்களுக்குத் தேவையானவற்றை பெற வேண்டி பெயர், விலாசம் எழுதி அரசாங்கத்திடம் மனு எழுதி சமர்ப்பிக்கிறோம் அல்லவா, அது போல அர்ச்சகர் மூலமாக இறைவனிடம் தனக்குத் தேவையானவற்றைப் பெற வேண்டி அர்ச்சனை செய்வதன் மூலமாக மனுவினை சமர்ப்பணம் செய்வர். எனக்கு என்ன தேவையோ அதனை இறைவன் அறிவான், […]

ஹரஹரா என்பதன் திரிபுச் சொல்லே அரோகரா.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே, சில இடங்களில் சிலசமயம் ‘ அரோகரா’ என்ற வார்த்தையை கேலியாக பயன்படுத்துவதை அவதானித்து இருப்பீர்கள். யாருக்கும் ஏதும் கஷ்டம் வருகிறது அல்லது வரப் போகிறது என்றால் கேலியாக ” அரோகரா” என்று சிலர் சொல்வதை அவதானித்து உள்ளோம். அதை தவிர்ப்போமே! ஹரஹரா என்பதன் திரிபுச் சொல்லே அரோகரா. ஹரன் என்பது பரமேஸ்வரனைக் குறிக்கும். ஹரன் என்றால் சிவன். சிவசிவா என்று சொல்கிறோம் அல்லவா, அது போல ஹரன் + ஹரன் = […]

இன்றைய கால கட்டத்தில் பிரார்த்தனையைத் தவிர வேறு எம்மால் என்ன செய்து விடமுடியும்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இன்றைய கால கட்டத்தில் பிரார்த்தனையைத் தவிர வேறு எம்மால் என்ன செய்து விடமுடியும்? காயத்திரி மந்திரத்தை மிக இலகுவாக மனப் பாடம் செய்து தினமும் இறைவனை வழிபடுவோம். மன அமைதியை பேணுவோம்.! “ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயான: ப்ரசோதயாத்” என்பது காயத்ரி மந்திரம். ஓங்காரப் பரம்பொருள் ஆன ‘எந்த பரமாத்மா நம்முடைய புத்தியையும், சக்தியையும் தூண்டுகிறாரோ, அந்த அனைத்தையும் படைக்கின்ற பகவானுடைய சிறந்த ஜ்யோதி ஸ்வரூபத்தை விடாமல் தொடர்ந்து […]

நாதஸ்வரமும், தவிலும் மேலும் பல இசைக்கருவிகள் ஏன் இசைக்கப் படுகின்றன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! நாதஸ்வரமும், தவிலும் மேலும் பல இசைக்கருவிகள் நம் ஆலயங்களில், திருமணங்களில் , மேலும் பல மங்கல நிகழ்ச்சிகளில் இசைக்கப் படுகிறது! வாத்தியக் கருவிகளை திருமணத்தில் ஏன் இசைக்கிறோம் ? வாத்தியக் கருவிகள் அனைத்தும் இசைக்கப்படுகின்ற இடத்தைச் சுற்றியுள்ள தீயசக்திகளை விரட்டி, இறை சாந்நித்தியத்தை முழுமையாகக் கொண்டு வர உபயோகப்படுகின்றன. மேலும், நம் இந்துமத திருமணங்களில் மணமக்களை இறைசக்திகளின் அம்சங்களாகவே பாவிக்கிறார்கள். உதாரணத்திற்கு ‘சீதா கல்யாண வைபோகமே… ராமா கல்யாண வைபோகமே..’, ‘ஆனந்தம் ஆனந்தம் […]

பிறந்த நாளை நட்சத்திரப்படிதான் கொண்டாட வேண்டும். எப்போது?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பிறந்த நாள்!!! பிறந்த நாளை நட்சத்திரப்படிதான் கொண்டாட வேண்டும். ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற பழக்கங்களில் ஒன்றாக, நாம் இன்னமும் பிறந்த நாளை ஆங்கில தேதியின்படி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அவரவர் ஜென்ம நட்சத்திரத்தின்படியே பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடினால்தான் இறைவனின் அனுக்கிரகம் எங்களுக்கு கிட்டும்! உதாரணத்திற்கு ஒருவர் ஆடி மாதம் பூர நட்சத்திர நாளில் பிறந்திருக்கிறார் என்றால் ஒவ்வொரு வருடத்திலும் வருகின்ற ஆடிமாதம் பூர நட்சத்திர நாள் அன்று பிறந்தநாளைக் கொண்டாட […]

ஆஞ்ச நேயரை பெண்களும் வழிபடலாம்!

பலர் எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல் சில எண்ணங்களை கொண்டிருப்பார்கள். உதாரணமாக ஆஞ்சநேயர் வழிபாடு, ஐயப்பன் வழிபாடு என்பன பெண்களுக்கு உரியது அல்ல என்ற தப்பான எண்ணங்கள் கொண்டிருப்பார்கள்! அது பிழையான எண்ணங்கள். ஆஞ்சநேயர், தெய்வீக சக்தி வாய்ந்தவர். அவரையும் கடவுளர்களில் ஒருவராக எண்ணி வழிபடுகிறோம். இதில் ஆண், பெண் பேதம் எங்கிருந்து வந்தது? ஆஞ்சநேயர், ஐயப்பன் முதலான இறைசக்திகள் பிரம்மச்சரிய விரதம் கொண்டவர்கள், இவர்களை பெண்கள் வழிபடக்கூடாது என்ற கருத்தினை ஏற்பதற்கில்லை. சபரிமலை தவிர்த்து இதர […]

ஆண்களும் நெற்றியில் குங்குமம் தரிக்கலாம் !!!

குங்குமம் அணிவது பெண்களுக்கு மட்டும் உரியது என்று யாராவது எண்ணினால் அது மிக மிக தவறாகும்! பெண்கள் நெற்றியில் குங்குமம் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும், ஆண்கள் நெற்றியில் திருநீறு மட்டுமே அணிய வேண்டும் என்பது தவறான கருத்து. சுமங்கலிப் பெண்களும் சரி, ஆண்களும் சரி நெற்றியில் திருநீறுடன் குங்குமத்தையும் திலகமாக வைத்துக் கொள்ள வேண்டும். ‘மந்திரமாவது நீறு’ என்கிறது தேவாரம். நெற்றியில் நீறு பூசுவதால் நோய்கள் காணாமல் போகின்றன. நமது உடம்பில் வலது மற்றும் இடது […]

Scroll to top