புது வீட்டுக்கு ஏன் பால் காய்ச்சுகிறோம்?

புது வீட்டுக்கு போகிறோம், பால் காய்ச்சுகிறோம் என்று சொல்வோம். இந்த பால் காய்ச்சும் வைபவத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? இளைய சமுதாயத்தினர் இவற்றை அறிந்து கொள்ள வேண்டும்! கடவுளை வழிபடுவோர் நிச்சயம் இதை புரிந்து கொள்வார்கள் நண்பர்களே!!!
‘க்ஷீரே சுக்ராய நம:’ என்கிறது வேத மந்திரம். க்ஷீரம் என்ற வார்த்தைக்கு பால் என்று பொருள். பசும்பாலினில் சுக்கிரனின் அம்சம் நிறைந்துள்ளது என்பது இந்த வாக்கியத்தின் அர்த்தம். ஆனந்த வாழ்வினையும், குறைவில்லாத பொருட்செல்வத்தினையும் தருகின்ற கிரஹம் சுக்கிரன். ஜோதிடவியல் ரீதியாக சுக்கிரனை தனகாரகன் என்றழைக்கிறார்கள்.
பசுமாட்டினுடைய மடியினில் மகாலட்சுமி வாசம் செய்வதாகச் சொல்வார்கள். அந்த மடியிலிருந்து கறக்கப்படும் பால், மகாலட்சுமியின் பிரசாதமாகக் கருதப்படுகிறது. நாம் குடியேறும் வீட்டினில் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காகவும், செல்வம் குறைவின்றி நிரம்பி வழிய வேண்டும் என்பதற்காகவும் வீடு குடியேறும்போது பால் காய்ச்சப்படுகிறது.
தற்காலத்தில் ஒரு சிலர் பால் காய்ச்சுவதற்கு பெரிய பாத்திரத்தை வைத்துவிட்டு அதில் சாஸ்திரத்திற்காக சிறிதளவு பாலை மட்டும் காய்ச்சுகின்றனர். அவ்வாறு செய்வதில் அர்த்தமில்லை. பாத்திரத்தில் இருந்து பால் பொங்கி சிறிதளவு வெளியே வழிகின்ற அளவிற்கு பாலை வைக்க வேண்டும். அதற்காக முற்றிலுமாக பால் பொங்கி வெளியேறிவிடவும் கூடாது. பால் பொங்கி பாத்திரம் நிறைவது போல் வீட்டினில் செல்வம் நிறைந்திருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
புது வீட்டுக்கு ஏன் பால் காய்ச்சுகிறோம்?
Scroll to top