பிறந்த நாளை நட்சத்திரப்படிதான் கொண்டாட வேண்டும். எப்போது?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
பிறந்த நாள்!!!
பிறந்த நாளை நட்சத்திரப்படிதான் கொண்டாட வேண்டும். ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற பழக்கங்களில் ஒன்றாக, நாம் இன்னமும் பிறந்த நாளை ஆங்கில தேதியின்படி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அவரவர் ஜென்ம நட்சத்திரத்தின்படியே பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடினால்தான் இறைவனின் அனுக்கிரகம் எங்களுக்கு கிட்டும்! உதாரணத்திற்கு ஒருவர் ஆடி மாதம் பூர நட்சத்திர நாளில் பிறந்திருக்கிறார் என்றால் ஒவ்வொரு வருடத்திலும் வருகின்ற ஆடிமாதம் பூர நட்சத்திர நாள் அன்று பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும்.
ஒரு சில தருணங்களில் ஒரே மாதத்தின் துவக்கத்திலும், இறுதியிலுமாக ஒரே நட்சத்திரமானது இரண்டு முறை இடம்பிடிக்கும். அம்மாதிரியான சமயங்களில் இரண்டாவதாக வருகின்ற நட்சத்திர நாள் அன்று பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். பிறந்த நாள் அன்று ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபட்டு நம் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.
பெற்றோரின் காலில் விழுந்து வணங்க வேண்டும். வீட்டில் உள்ள பிள்ளைகள் ,மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்த கேக் வெட்டி ஒரு குடும்ப மகிழ்வுக்காக செய்து கொள்ளலாம். ஆனால் இறைவழிபாடு என்று வரும்போது ஜன்ம நட்சத்திரம்தான் பிரதானமானது!!! இவற்றையெல்லாம் விடுத்து, அந்த கேக்கினை முகத்தில் எடுத்து பூசிக்கொள்வதும் வீண் பகட்டு மற்றும் ஆடம்பரத்திற்காகச் செய்யப்படுகின்ற காரியங்களே தவிர அவற்றால் மனம் நிறைவடையாது. இறை அருளும் கிட்டாது!!!
பிறந்த நாளை நட்சத்திரப்படிதான் கொண்டாட வேண்டும். எப்போது?
Scroll to top