தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஏன் காகத்துக்கு அன்னம் இடுகிறோம்???
எத்தனையோ பறவைகள் இருக்க ஏன் காகத்திற்கு மட்டும் உணவு வழங்க வேண்டும் ??? அதற்கு காஞ்சி மஹாபெரியவர் அளித்த விளக்கம்:
தினமும் காகத்துக்கு அன்னம் இட்டு பின்னர் சாப்பிடும் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். ஆமாவாசையின் போது காகத்துக்கு அன்னமிடும் பலர் இருக்கிறார்கள்! இதன் அர்த்தம் புரியாமல் கேலி பண்ணும் நபர்களும் இருக்கிறார்கள்!!!
எத்தனையோ பறவைகள் இருக்க ஏன் காகத்திற்கு மட்டும் உணவு வழங்க வேண்டும் என்று கேட்டார்.அதற்கு காஞ்சி மஹாபெரியவர் அளித்த விளக்கம்:
உயிரினங்களிலேயே அதன் குரல் மூலம் அழைக்கப்படும் ஒரே உயிரினம் காகம் தான்.பூனை மியாவ் என கத்துகிறது. அதை மியாவ் என அழைக்கிறோமா. கிளி கிக்கி என கத்துகிறது அதை கிக்கி என அழைக்கிறோமா. காகத்தை மட்டும் தான் அப்படி அழைக்கிறோம். அதுவே அதன் முதல் சிறப்பு. அடுத்து வார்த்தைகள். கா என்றால் காப்பாற்று என அர்த்தம். காகத்திற்கு சாதம் வைத்துவிட்டு கா..கா.. என கத்துகிறோம்.
அப்படியெனில் நமது முன்னோர்களை அழைத்து நம்மை காப்பாற்றுங்கள் என கேட்பதாக அர்த்தம்.
மேலும் அது எங்கும் எப்போதும் இருக்கும் பறவை. நாம் தேடி அலைய வேண்டியதில்லை. மிகவும் அறிவானது, அழகானது.
சிராத்தம் போன்ற கிரியைகளின்போது ‘உச்சிஷ்ட பிண்டம் வாயஸேப்யோ தத்யாத்’ என்ற வசனத்தினால் முன்னோர் கடன் செய்தபிறகு, அன்னத்தைக் காகத்துக்கு வைக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
‘காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள’ – என்று திருவள்ளுவரும்,
‘ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் பார்த்திருந்துண்மின், பழம்பொருள் போற்றன்மின்
வேட்கையுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணுங் காலம் அறிமினே’
– என திருமூலர் திருமந்திரத்திலும் காக்கையைச் சிறப்பிக்கின்றனர்; அவற்றைப் போல நாமும் பகிர்ந்துண்டு வாழவேண்டும் என்று வழிகாட்டு கின்றனர். காக்கைகள் கரைந்து விருந்தினர் வருகையை அறிவிக்கும். இதை ‘விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே’ என்று குறிப்பிடு கிறது குறுந்தொகை.
இப்படி, பல உயர்ந்த குணங்களைக் கொண்ட காக்கைக்கு அன்னமிடுவது மிகவும் சிறப்பு. அதேபோல், மற்ற உயிரினங்களுக்கும் உணவு அளித்து மகிழலாம்.
தினமும் காகத்துக்கு அன்னம் இட்டபின் தாம் உணவு அருந்தும் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள்! ஒவ்வொரு அமாவாசைக்கும் காகத்துக்கு சாதம் வைத்த பின்பு தாம் சாப்பிடும் பலரை பார்க்கிறோம். அதே சமயம் அர்த்தம் தெரியாத சிலர் இவற்றை கேலி பண்ணுவதையும் பார்க்கிறோம்! நல்லதை எண்ணுவோம். நன்மைகளைப் பெறுவோம்!!!
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணைய தள மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
காகத்துக்கு ஏன் அன்னம் இடுகிறோம்???