ஈசனுக்கு உகந்த நாகலிங்கப் பூவின் மகிமைகள்
ஓம் நமச்சிவாய நமஹ என்று 1001 முறை ஜபித்தப் பின்னரே,நாகலிங்கப் பூவைத் தொடும் அருகதை நமக்கு வருகின்றது;
அதே போல,நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாத்தவேண்டும் என்று விரும்பினால்,21 சாதுக்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும்;அதன் பிறகு தான் நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாத்தவேண்டும்;இப்படி முறைப்படி செய்தால் மட்டுமே நாகலிங்கப் பூவை ஈசனுக்கு அணிவித்த புண்ணியம் நமக்குக் கிட்டும்;
நாகலிங்கப் பூவின் மேல் பகுதியில் கோடி கன்னிகா தான சக்தியைக் கொண்டிருக்கின்றது;
நாகலிங்கப்பூவின் நடுப்பகுதி 10,000 கோவில்களின் கோபுரசக்தியைச் சேர்ந்தது;
நாகலிங்கப்பூவின் அடிப்பகுதி கோவில் குளம் வெட்டிய சக்தியைக் கொண்டிருக்கிறது;
நாகலிங்கப்பூவின் நடுவில் சிறியதாக ஒரு சிவலிங்கம் இருக்கும்;இதற்கு ஆத்மலிங்கம் என்று பெயர்; *இத்தனை சிறப்புடைய நாகலிங்கப்பூவை மேலே கூறிய விதத்தில் பயன்படுத்தினால் மட்டுமே நமக்குப் புண்ணியம் கிட்டும்*
*நாகலிங்கமரம் புஷ்பம் மகிமை*
1.”நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்” இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும் .பூவுலகின் மகத்தான .நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது ,நாம் பெற்ற புன்னியப் பேறே. தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும்
2.நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.
3.பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை
4.நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.
5.நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது ,நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான , உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம் .
6.ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும் .இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது
7.ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய ,சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது என்ற அறிய விடயத்தை நாகசாலிச் சித்தரும், நாகமாதா சித்தரும் பூவுலகிற்கு மீண்டும் உணர்த்தினார்கள்.
*நாகலிங்க மரத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தரிசிப்போம்