தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
தானங்களில் சிறந்த தானம் அன்னதானம்.
ஒருவர் வாழ்க்கையில் உள்ள பிறவிப்பிணியை கடந்து முத்தி பெற எவ்வளவு உணவு சாப்பிடுகிறாரோ அவ்வளவு அளவு உணவையும் அன்னதானம் செய்தே ஆக வேண்டும். என்பது அகத்தியர் கூற்று. உதாரணத்திற்கு ஒருவர் ஒரு மாதத்திற்கு 10 படி அரிசி, 20கி காய்கறி, பிற சாமான்கள் (சோம்பு, சீரகம், மிளகு) சாப்பிடுகிறார் என்றால், முடிந்த வரை அதே மாதத்தில் வரும் ஒரு நல்ல நாளில் அவர் சாப்பிட்ட அளவு உணவை, காய்கறி, பிற பொருட்கள் கலந்து தானம் செய்ய வேண்டும். இதில் எந்த விதிவிலக்கும் கிடையாது.
“”நீர்க்குமிழி வாழ்வைநம்பி
நிச்சயமென் றேயெண்ணிப்
பாக்களவாம் அன்னம்
பசித்தோர்க் களியாமல்
போர்க்குளெம தூதன்
பிடித்திழுக்கு மப்போது
ஆர்ப்படுவா ரென்றே
யறிந்திலையே நெஞ்சமே.””
எனக் கூறுகிறார் மகான் பட்டினத்தார்.
நீரின் அடியில் தோன்றிய நீர்குமிழியானது பார்க்க அழகாய் இருக்கும் ஆனால் நீரின் மேல் வந்தவுடன் வடிவத்தை இழந்துவிடும். அதுபோல மனித வாழ்வும் குறுகியகாலமே கொண்டதால் வாழ்வை நிலையென நம்பி பொருள் சேர்ப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு வாழக்கூடாது.
செல்வத்தால் உண்டான பந்தங்கள் அச்செல்வம் உள்ளவரை தான் அதனால் தான் செல்வம் உள்ளபோதே தான தருமங்கள் செய்தால் அது உங்களை காப்பாற்றும்.
பசித்து வருவோருக்கு உணவளிக்காது யமதூதன் பிடித்து இழுக்கும்போது கவலைப்பட்டு எதுவும் நடக்கப்போவதில்லை.
எது நம்மை காக்க விட்டாலும் நாம் செய்யும் தர்மம் எங்களை காக்கும். இது பட்டினத்தார் வாக்கு.