நண்பர்களே, பல அரிய விடயங்களை திரட்டி, தொகுத்து, பல ஆன்மிக நூல்களின் தகவல்களின் அடிப்படையில் உங்களுக்கு தருவது உங்கள் MIH மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனம். அந்த அடிப்படையில் இன்றைய அரிய தகவல் இது:
தீபங்கள் பதினாறு : தூபம், தீபம் புஷ்பதீபம் (பூ விளக்கு), நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத (குதிரை) தீபம், வியாக்ர (புலி) தீபம், ஹம்ஸ் (அன்னம்) தீபம், கும்ப (குடம்) தீபம், குக்குட (கோழி) தீபம், விருக்ஷ தீபம், கூர்மா (ஆமை) தீபம், நட்சத்திர தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என தீபங்கள் 16 வகைப்படும்.
தூக்கு விளக்குகள் ஒன்பது : 1. வாடா விளக்கு 2. ஓதிமத்தூக்கு விளக்கு 3. தூண்டாமணி விளக்கு 4. ஓதிம நந்தா விளக்கு 5. கூண்டு விளக்கு 6. புறா விளக்கு 7. நந்தா விளக்கு 8. சங்கிலித் தூக்கு விளக்கு 9. கிளித்தூக்கு விளக்கு.
பூஜைவிளக்குகள் ஒன்பது : சர்வராட்சததீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாகர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் ஆகியவை 9 வகை பூஜை விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன. சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் மூன்று வகைகளாகும்.
கைவிளக்குகள் ஏழு : கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, சம்மனசு விளக்கு, கணபதி விளக்கு, கைவக் விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும்.
நால்வகை திக்பாலர் தீபங்கள் : ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.
அஷ்டகஜ தீபங்கள் எட்டு : ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சர்வ பவும தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம்