தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
மங்கலப்பொருட்கள் சம்பந்தமாக மேலும் சில பல தகவல்களை அறிவோம்!!!
இனிப்பு பொருட்களில் மகாலட்சுமிக்கு மிகப் பிரியம் உண்டு. மகாலட்சுமியின் அனுக்ரகம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, எந்த ஒரு நல்ல விடயங்களுக்கும் , மற்றும் திருமணக் கூடங்கள், வேள்விச் சாலைகள் முதலான இடங்கள் திருமகளின் இருப்பிடங்கள் என்பதால், அங்கு வருவோருக்கு லட்டு , முதலான இனிப்புகள் வழங்குவது சிறப்பு மட்டுமல்ல இன்றும் நடைமுறையில் உள்ள விஷயங்கள்!!!
லட்சுமியின் அம்சம், உப்பு. அவளைப் போலவே உப்பும் கடலில் பிறப்பது. இன்றைக்கும் சில பகுதிகளில் கிருகப்பிரவேசத்தின்போது முதலில் எடுத்துச் செல்லும் பொருட்களில் உப்பும் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கும்!
திருமகள் வில்வத்தில் நிலைத்திருப்பதாக அவளுக்கான சகஸ்ரநாமம் போற்றுகிறது.
ஆக, வில்வ மரத்தை வழிபடுவதும், வீட்டில் வில்வ கனியை வைத்துப் பூஜிப்பதும் மங்கலத்தை அளிக்கும்.
பூஜிக்கத்தக்க மகாபாக்கியமுள்ள, தூய்மை நிறைந்த இல்லத்தரசிகளையும் கிருகலட்சுமியாகப் புராணங்கள் போற்றுகின்றன. ஆகவேதான் சுமங்கலி வழிபாடுகள் வழிபாடுகளை செய்து ,அவர்களைச் சிறப்பித்துப் போற்ற நம் வீடும், குடும்பமும் செழித்தோங்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
மங்கலப்பொருட்கள் சம்பந்தமாக மேலும் சில பல தகவல்களை அறிவோம்!!!