ஆலயத்தில் நடந்து வழிபடுங்கள்! ஓடி ஓடி வழிபடாதீர்கள்.

நண்பர்களே, பல ஆலயங்களில் நாம் அவதானித்துள்ளோம், பல அன்பர்கள் அவசரமாக ஓடி ஓடி பிரகாரம் வலம் வந்து கொண்டிருப்பார்கள். அதுதவறு. சிறு வயதில் இருந்தே பிள்ளைகளுக்கு ஆலய வழிபாட்டு முறைகளை கற்பிக்க வேண்டும்.

ஒரு நிறைமாத கர்ப்பிணி, எப்படி பவ்யமாக நடப்பாளோ, அந்தளவு வேகத்தில் தான் பிரகாரத்தை வலம் வர வேண்டும். கோயில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகார வலம் வந்து வணங்குவது வழக்கம். சிலர், வேலைக்குப் போக வேண்டும், என்ற நோக்கத்தில், வேக வேகமாக கோயிலை வலம் வருவார்கள். சிலர் ஒரு கையால் நமஸ்கரித்து விட்டு, அல்லது வாயருகே கையைக் கொண்டு வந்து முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்து விட்டு வேகமாக கோயிலைக் கடப்பார்கள். இவையெல்லாம் சாஸ்திரப்படி தவறு. ஒரு நிறைமாத கர்ப்பிணி, எப்படி பவ்யமாக நடப்பாளோ, அந்தளவு வேகத்தில் தான் பிரகாரத்தை வலம் வர வேண்டும். அப்போது, அந்த தெய்வத்தின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். கதை பேசிக்கொண்டும், சேஷ்டைகள் செய்தபடியும் கோயிலை வலம் வரக்கூடாது. குழந்தைகள் சப்தம் செய்தால், அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச்சொல்லி, அமைதிப்படுத்த வேண்டும். இவ்வாறு வலம் வருவதால், முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் விலகி விடும்.
-நன்றி ஆன்மிக மலர்.

ஆலயத்தில் நடந்து வழிபடுங்கள்! ஓடி ஓடி வழிபடாதீர்கள்.
Scroll to top