வெற்றிலையின் மருத்துவக் குணம்!

நண்பர்களே, இதுஒரு மருத்துவக் குறிப்பு:

வெற்றிலைக் கொடியை வீட்டில் வளர்க்க அதிக இடம் தேவையில்லை. அவ்வப்போது கொடியைக் கத்தரித்து தேவையான அளவுக்கு வளர்த்துக்கொள்ளலாம். இதுவும் விஷ ஜந்துகளை அண்டவிடாது.

வெற்றிலைச் சாறு, அனைத்து வயதினருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மதியம் சாப்பிட்டவுடன் வெற்றிலையுடன் பாக்கு, ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய், சுண்ணாம்பு சேர்த்து வாயில்போட்டு மென்றால்… ஜீரண மண்டலம் பலம்பெறும். ஜீரணக் கோளாறுகளும், சளியும் சரியாவதுடன், தொண்டை வலியும் குணமாகும். வெற்றிலை சாப்பிட்ட பின் வாயை நன்கு சுத்தப்படுத்தி வந்தால் காவி படியாது.

வெற்றிலையின் மருத்துவக் குணம்!
Scroll to top