கட்டுரை

தனது வாழ்க்கையில் ஒரு நாள் என்றாலும் காசிக்கு போகவேண்டும், வழிபாடுகள் செய்ய வேண்டும் , முன்னொருக்கு திதி கொடுக்க

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தனது வாழ்க்கையில் ஒரு நாள் என்றாலும் காசிக்கு போகவேண்டும், வழிபாடுகள் செய்ய வேண்டும் , முன்னொருக்கு திதி கொடுக்க வேண்டும் , என்று பலருக்கு வேண்டுதல்கள் உண்டு. ஆனால் அது எல்லோருக்கும் இலகுவாக நிறைவேறுவதில்லை நண்பர்களே! பொருளாதாரப் பிரச்சினைகள், நேரமின்மை, நோய் நொடிகள், பலமணி நேரம் பிரயாணம் செய்ய முடியாமை என்று பல காரணங்கள் உண்டு. காசிக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும்வரை தமிழ் நாட்டிலேயே நாம் சிலபல வழிபாடுகளை செய்ய முடியும்! ”அயோத்யா […]

சங்கின் மகிமை பற்றி பார்ப்போம்: சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சங்கின் மகிமை பற்றி பார்ப்போம்: சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது. சங்கின் குணம் நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது. இதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள். இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது. மகாலட்சுமிக்கு […]

24 மணி நேரமும் கோயில்கள் திறந்திருக்க வேண்டும் என்ற கருத்து தவறானது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நம்மில் சிலர் இருக்கிறார்கள், தமது சொந்த வேலை எல்லாம் முடித்துவிட்டு ,தமக்கு விரும்பிய நேரத்தில் ஆலயத்துக்கு வருவார்கள். அந்த நேரம் ஆலயம் சாத்தப் பட்டிருக்கும். சலித்துக் கொள்வார்கள். தமது தவறை மறந்து விட்டு ” ஐயர் கோவிலை சாத்திவிட்டு போய் விட்டார் என்றோ அல்லது இண்டைக்கு நேரத்துக்கு கோயில் சாத்திவிட்டார்கள்” என்ற முணுமுணுப்புடன் திரும்பி செல்வதை பார்த்திருக்கிறோம். எல்லா நேரமும் ஆலயம் திறந்திருக்கும் என்று எண்ணுவது தவறானது. 24 மணி நேரமும் கோயில்கள் […]

ஐயப்ப விரதம் இருக்கும் அன்பர்கள் கறுப்பு நிற ஆடை அணிவதை பார்த்து இருக்கிறோம். ஏன் அவர்கள் கறுப்பு நிற ஆடை அணிகிறார்கள் நண்பர்களே?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஐயப்ப விரதம் இருக்கும் அன்பர்கள் கறுப்பு நிற ஆடை அணிவதை பார்த்து இருக்கிறோம். ஏன் அவர்கள் கறுப்பு நிற ஆடை அணிகிறார்கள் நண்பர்களே? பொதுவாக நமது இந்து மதத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு வர்ண ஆடை என்பது உண்டு இது ஒரு புறம் இருந்தாலும் விரதம் இருப்பதற்கு என்று தனியாக எந்த ஒரு நிறத்தையும் சாஸ்திரம் நிர்ணயம் செய்யவில்லை. விரதம் என்ற வார்த்தைக்கு மன உறுதி என்பது மட்டுமே பொருள். மனதில் உறுதியோடு […]

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதன் அர்த்தம் தெரியுமா ??

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதன் அர்த்தம் தெரியுமா ?? மாமிசம் சாப்பிடுபவர்கள் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று சொல்லி தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையில் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? மாமிசம் உண்பவர்கள் இறப்புக்குப் பின் நரகம் கொண்டு செல்லப்படுவார்கள். எமலோக கிங்கரர்கள் அவர்களது சதையை அறுத்து, பூலோகத்தில் இருந்து மிருகங்களின் சதையைத் தின்றாய் அல்லவா! இப்போது உன் சதையை நீ சாப்பிடு என்று ஊட்டி விடுவார்கள். அறுக்கிற வலியையும் பொறுத்துக்கொண்டு சாப்பிட்டே […]

‘பாவ விமோசனம் தரும் கோமாதா வழிபாடும்,பசுமாடு தானமும் ” என்ற விடயத்தை பார்ப்போம்।

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே, இன்று ”பாவ விமோசனம் தரும் கோமாதா வழிபாடும்,பசுமாடு தானமும் ” என்ற விடயத்தை பார்ப்போம்। பலதரப்பட்ட சந்தர்ப்பங்களில் பசு மாடு வழிபாட்டையும் ,பசுமாடு தானம் கொடுப்பதையும் பார்த்திருக்கிறோம். தானங்களில் பல்வேறு தானங்கள் இருந்தாலும் அதில் கோ எனப்படும் பசு தானம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பசு தானத்தை செய்வதன் மூலம், ஒருவர் செய்த பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. பசு தானம் செய்பவன் தனது முன்னோர்களை […]

மந்திரங்களின் மகிமை என்ன? வலிமை என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மந்திரங்களின் மகிமை என்ன? வலிமை என்ன? கோயிலின் உச்சியில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. அபிஷேகங்கள் நடைபெறுகின்றன, குடத்தில் இருக்கும் நீர் சற்று முன்னர்தான் எதிரேயுள்ள குளத்திலிருந்து அல்லது கோவில் கிணற்றில் இருந்து கொண்டு வரப்பட்டது. அதுவரை சாதாரணமாக இருந்த நீர் இப்போது புனித தீர்த்தமாக, கும்பாபிஷேக தீர்த்தமாக மாறிவிட்டது. அபிஷேகம் நடந்த உடன் அந்த நீரை பருகவோ அல்லது தமது தலையில் தெளித்துக் கொள்ளவோ ,அதை எடுத்துக்கொள்ள போட்டியே நடக்கிறது. என்ன காரணம்? […]

தானங்களில் சிறந்த தானம் அன்னதானம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தானங்களில் சிறந்த தானம் அன்னதானம். ஒருவர் வாழ்க்கையில் உள்ள பிறவிப்பிணியை கடந்து முத்தி பெற எவ்வளவு உணவு சாப்பிடுகிறாரோ அவ்வளவு அளவு உணவையும் அன்னதானம் செய்தே ஆக வேண்டும். என்பது அகத்தியர் கூற்று. உதாரணத்திற்கு ஒருவர் ஒரு மாதத்திற்கு 10 படி அரிசி, 20கி காய்கறி, பிற சாமான்கள் (சோம்பு, சீரகம், மிளகு) சாப்பிடுகிறார் என்றால், முடிந்த வரை அதே மாதத்தில் வரும் ஒரு நல்ல நாளில் அவர் சாப்பிட்ட அளவு உணவை, […]

ஈசனுக்கு உகந்த நாகலிங்கப் பூவின் மகிமைகள்

    ஈசனுக்கு உகந்த நாகலிங்கப் பூவின் மகிமைகள் ஓம் நமச்சிவாய நமஹ என்று 1001 முறை ஜபித்தப் பின்னரே,நாகலிங்கப் பூவைத் தொடும் அருகதை நமக்கு வருகின்றது; அதே போல,நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாத்தவேண்டும் என்று விரும்பினால்,21 சாதுக்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும்;அதன் பிறகு தான் நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாத்தவேண்டும்;இப்படி முறைப்படி செய்தால் மட்டுமே நாகலிங்கப் பூவை ஈசனுக்கு அணிவித்த புண்ணியம் நமக்குக் கிட்டும்; நாகலிங்கப் பூவின் மேல் பகுதியில் கோடி கன்னிகா தான சக்தியைக் கொண்டிருக்கின்றது; […]

அபிஷேக நேரத்தில் வழிபாடு செய்யலாமா?

அபிஷேக நேரத்தில் வழிபாடு செய்யலாமா? ஆலயங்களில் இவ்வாறுதான் பூஜை செய்யவேண்டும்; அந்தந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களை உச்சரிக்கவேண்டும்; அபிஷேக ஆராதனை செய்யவேண்டுமென்று ஆகமங்கள் வரையறுத்துக் கூறியுள்ளன. அதனால் தெய்வங்களுக்குப் பயனுண்டா என்றால், அவர்களுக்கு எதுவுமில்லை. முறையாகச் செய்யவில்லையென்றால் நமக்குதான் வளர்ச்சி தடைப்படும். இறைவன் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவன் படைத்த உயிர்களாகிய நாம்தான் அவனிடம் நிறைய எதிர்பார்க்கிறோம். அதற்கான பிரபஞ்ச சக்தி ரகசியங்களை உணர்ந்த முனிவர்களும் ஞானிகளும்தான், நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள் வதற்கான வழிமுறைகளை ஆகமங்களாக எழுதிவைத்தனர். அவற்றை […]

Scroll to top