தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
நண்பர்களே, இன்று ”பாவ விமோசனம் தரும் கோமாதா வழிபாடும்,பசுமாடு தானமும் ” என்ற விடயத்தை பார்ப்போம்।
பலதரப்பட்ட சந்தர்ப்பங்களில் பசு மாடு வழிபாட்டையும் ,பசுமாடு தானம் கொடுப்பதையும் பார்த்திருக்கிறோம்.
தானங்களில் பல்வேறு தானங்கள் இருந்தாலும் அதில் கோ எனப்படும் பசு தானம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பசு தானத்தை செய்வதன் மூலம், ஒருவர் செய்த பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. பசு தானம் செய்பவன் தனது முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், பசு தானம் முக்கியத்துவம் பெறுகிறது।
அந்த அடிப்படையில்,கோ தானம் என்பது ஒரு குறிப்பிட்ட காரியம் வெற்றிகரமாக முடிய சங்கல்பம் செய்து செய்யலாம். ஆலய கும்பாபிஷேக நேரங்களிலும், யாகம் ஆரம்பிக்கும் பொழுதும், வீடு குடி புகுதல் போன்ற சுபகாரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும், தனது வம்சம் சிறப்புற விளங்கவும் கோ தானம்செய்யலாம்.
மேலும், ஒருவர் தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தனக்காக தானே கோ தானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் பிரியும் பொழுது அவருக்காக உக்ராந்தி கோ தானம் என்று செய்வதுண்டு. வாழும் போது செய்யும் எந்த தீய செயல்களும் ,அவர் இறக்கும்போது செய்யப்படும் கோதானத்தால் அடிபட்டுப் போகிறது என்பது சாஸ்திர ரீதியாக நம்பப்படும் விடயம்.
இதற்கு வைதரணி கோ தானம்என்று பெயர். வைதரணி கோ தானம் செய்வதால் பசுவின் வாலைப்பிடித்துக் கொண்டு இறந்தவர் நற்கதி டைவதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் வருடப்பிறப்பிலும், புண்ணிய காலங்களிலும் கோ தானம் செய்வது மிக விசேஷமானதாகும்.
சாஸ்திரங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், பசு தானம் மிகச் சிறப்பிக்கப்படுகிறது. ஒருவரின் வருடப்பிறப்பிலும், ஜென்ம நக்ஷத்திரத்திலும் கோதானம் செய்வதும், கோபூஜை செய்வதும் மேன்மை தரும். பசுதானம் செய்பவர்களுக்குக் கயிலையில் சிவகணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டும்.
”கோவத்ஸ துவாதசி விரதம்” என்று ஒரு விரதம் பலரால் அனுஷ்டிக்கப்டுகிறது. ஐப்பசி மாத கிருஷ்ணபட்சத்தில் வரும் துவாதசிக்கு கோவத்ஸ துவாதசி என்று பெயர்.
கோ’ என்றால் பசு. “வத்ஸ” என்கிற வார்த்தைக்கு மகன் அன்புக்குரிய என அர்த்தம். அதாவது பசுவை அன்புடன் கொண்டாட வேண்டி வழிபட வேண்டிய நாள் இது. தனியாக இல்லை. அதன் கன்றோடு சேர்த்து வழிபட வேண்டும். பசுக்களில் நான் காமதேனு என்கிறான் பகவான் கீதையில். அந்தப் பசுவை கன்றுடன் பூஜித்து பகவானின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டிய தினம் இந்த கோவத்ஸ துவா
தசி. அப்படி வணங்கும் போது லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.