பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம் சொல்வது என்ன?
இன்று சில இடங்களில் அவதானித்து இருப்பீர்கள், பெண்கள் சிலர் தங்கத்தில் கொலுசு அணிந்திருப்பார்கள். அது தவறான செயலாகும். பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம் சொல்வது என்ன? உண்மையில், பெண்கள் தங்கத்தில் கொலுசு செய்து அணிந்துகொள்ளக் கூடாது என்றே சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. ஜோதிட நூல்களும் இதையே வலியுறுத்துகின்றன. நம், உடலின் உறுப்புக்களை நவக்கிரக ரீதியாக இணைத்துப் பார்க்கச் சொல்லி வலியுறுத்துகிறது ஜோதிட சாஸ்திரம். அதாவது நவக் கிரகங்களில் ஒன்றான சூரியனை, நம் கண்ணுக்கு இணையாகச் […]
திருவாதிரையும் பிரதோஷமும் இணைந்த இந்த நன்னாளில், தென்னாடுடைய சிவனை வணங்குவோம்.
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருவாதிரையும் பிரதோஷமும் இணைந்த இந்த நன்னாளில், தென்னாடுடைய சிவனை வணங்குவோம். பிரதோஷம். அற்புதமான இந்த நன்னாளில், மாலையில் சிவாலயங்களில் பிரதோஷ பூஜைகள் நடைபெறும். நந்திதேவருக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள் விமரிசையாக நடந்தேறும். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்துவது விசேஷம். பல சங்கடங்களையும் கஷ்டங்களையும் தீர்த்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதி உண்டு. அந்தத் திதியும் ஒவ்வொரு தெய்வத்துக்கு உரிய திதியாகப் போற்றப்படுகிறது. ஏகாதசி திதியும் துவாதசி திதியும் பெருமாளுக்கு […]
எங்களை இந்த உலகத்துக்கு கொண்டு வந்து வளர்த்து ஆளாக்கி சகலமும் செய்த எங்கள் மறைந்த மூதாதையர்,
எங்களை இந்த உலகத்துக்கு கொண்டு வந்து வளர்த்து ஆளாக்கி சகலமும் செய்த எங்கள் மறைந்த மூதாதையர், பெற்றவர்கள் ,பெரியவர்கள் எல்லோரையும் வழிபடுவோம். இல்லை என்றால் அவர்களுக்கு எப்படி நன்றி செலுத்தப் போகிறோம் நண்பர்களே??? பித்ருலோகம் என்று அழைக்கப்படும் முன்னோர்களின் உலகத்தில் ஒவ்வொரு வம்சத்திற்கும் மூன்று ஆசனங்கள் உண்டு. இந்த மூன்று ஆசனங்களிலும் மூன்று வடிவத்தைச் சேர்ந்தவர்கள் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு முறையே வஸூ, ருத்ர, ஆதித்ய ரூபம் என்று பெயர். அதாவது தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா இவர்கள் […]
திருமண மேடையில் ‘அரசாணிக்கால்’ என்பதை அறிவோம்.
திருமண மேடையில் ‘அரசாணிக்கால்’ என்பதை அறிவோம். திருமண மேடையில் அரசாணிக்கால் நடுவது என்பது வரலாறு, தெய்வீகம் மற்றும் சம்பிரதாயம் ஆகிய மூன்றின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொன்றாகக் காண்போம். அரச மரத்தின் அடிபாகத்தில் பிரம்மாவும், மத்தியில் மஹாவிஷ்ணுவும், உச்சியில் பரமேஸ்வரனும் வசிக்கிறார்கள் என்பதால் மும்மூர்த்திகளையும் திருமண மேடைக்கு வரவழைக்கும் நோக்கத்தோடு அரசமரக் கிளையை மணவறையில் நட்டு வைக்கிறார்கள். முகூர்த்தம் தொடங்குவதற்கு முன் துவக்க நிகழ்ச்சியாக இந்த அரசமரக் கிளைக்கு பால், தயிர், கோமியம் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் […]
புதிதாக செய்து பிரதிஷ்டை செய்யப் பட உள்ள இறைவனின் சிலைகளின் கண்கள் திறக்கும் வைபவம்!!!
புதிதாக செய்து பிரதிஷ்டை செய்யப் பட உள்ள இறைவனின் சிலைகளின் கண்கள் திறக்கும் வைபவம்!!! கோயிலில் பிரதிஷ்டை செய்யவிருக்கும் சிலையை சிற்பி செய்து முடித்தவுடன், அச்சிலைக்கு கண் திறக்கச் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். இது மிக முக்கியமானது. ஸ்தபதியானவன் குளித்து, புத்தாடை உடுத்தி, பூணூல் அணிந்து (சிலை செய்யும் விஸ்வகர்மா சமூகத்தினர் பூணூல் அணிவர்) நெற்றிக்குத் திலகம் இட்டு, விரல்களில் மோதிரம் அணிந்து, இடது தோளில் மேலாடை தரித்த பின், முதலில் கணபதி பூஜை செய்ய வேண்டும். […]
பிராமணர்கள் தமது வாழ்க்கையில் செய்ய வேண்டிய 40 கடமைகளை ஸம்ஸ்காரங்கள்’ என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது!
பிராமணர்கள் தமது வாழ்க்கையில் செய்ய வேண்டிய 40 கடமைகளை ஸம்ஸ்காரங்கள்’ என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது! அந்த சம்ஸ்காரங்கள் யாவை என்பது கௌதமரால் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தோந்நயனம், ஜாதகர்மா, நாமகரணம், அன்னப்ராசனம், சௌளம், உபநயனம், நான்கு வேதவ்ரதங்கள், ஸமாவர்த்தனம், விவாஹம், ஐந்து மஹாயக்ஞங்கள், அஷ்டகை, பார்வணம், ஸ்ராத்தம், ஸ்ராவணீ, ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆஸ்வயுஜீ என்ற ஏழு பாகயக்ஞ ஸம்ஸ்த்தைகள், ஆதானம், அக்னிஹோத்ரம், தர்ஸபூர்ணமாஸங்கள், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யங்கள், நிரூடபசுபந்தம், ஸௌத்ராமணீ என்ற ஏழு ஹவிர்யக்ஞ ஸம்ஸ்தைகள், அக்னிஷ்டோமம், […]
பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம் என்கிறோம். அப்படி என்றால் என்ன? அறிவோம்.
பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம் என்கிறோம். அப்படி என்றால் என்ன? அறிவோம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். ஒருசில ஆலயங்களில் புனரமைப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்வார்கள். இவற்றை முறையே ஜீர்ணோத்தாரண மஹாகும்பாபிஷேகம், புனருத்தாரண மஹாகும்பாபிஷேகம் என்றும் அழைப்பார்கள். இந்த வகையிலான கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்னர் ஆலயத்தில் உள்ள மூர்த்தங்களின் சாந்நித்யத்தை அத்திப்பலகையில் உருவம் வரைந்து அதன் மீதோ அல்லது உற்சவர் விக்கிரகத்தின் மீதோ மாற்றுவார்கள். அதாவது மூலஸ்தானத்தில் உள்ள தெய்வங்களின் சக்தியை அந்த […]
நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இறைவனுக்கு தினமும் நன்றி சொல்வோம்!
நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இறைவனுக்கு தினமும் நன்றி சொல்வோம்! நம் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவான உணவு, உடை, இருப்பிடம் இவற்றை நமக்களித்த, நமக்குக் கொஞ்சமும் அறிமுகமில்லாத பலருக்கு, அவற்றைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சமயமும் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்களாகிறோம். நம் தேவைகளை நாம் பணம் கொடுத்துதான் வாங்குகிறோம். ஆனாலும் பணம் கொடுத்தாலும் கிடைக்கும்படியாக அவற்றைத் தயாரித்து நமக்களித்திருக்கும் அந்த முகம் தெரியாத அன்பர்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். உணவு உண்ணுமுன் ஓரிரு விநாடிகள் பிரார்த்திப்பதும், புத்தாடை அணியுமுன் அவற்றை […]
இந்து திருமண விதிகளின்படி ஆரம்ப காலத்தில் தாலி கட்டும் சம்பிரதாயம் கிடையாது.
உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்வோம்! இந்து திருமண விதிகளின்படி ஆரம்ப காலத்தில் தாலி கட்டும் சம்பிரதாயம் கிடையாது.தாலி கட்டினால் மட்டும் அந்தத் திருமணம், இந்து திருமணச் சட்ட விதிகளின்படி செல்லுபடி ஆகாது. பாணிக்ரஹணம் (மணமகளின் கரம் பற்றி உறுதி கூறுதல்), ஸப்தபதி (மணமகளின் வலது கால் கட்டை விரலை பிடித்து ஏழு அடி எடுத்து வைத்தல்) ஆகிய நிகழ்வுகள் நடந்தால்தான் இந்து மத திருமண விதிகளின்படி திருமணம் நடந்ததாக ஏற்றுக்கொள்ளப்படும். சாஸ்திர விதிகளின்படி தாலி கட்டுதல் கிடையாது. […]