இந்து திருமண விதிகளின்படி ஆரம்ப காலத்தில் தாலி கட்டும் சம்பிரதாயம் கிடையாது.

உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்வோம்!
இந்து திருமண விதிகளின்படி ஆரம்ப காலத்தில் தாலி கட்டும் சம்பிரதாயம் கிடையாது.தாலி கட்டினால் மட்டும் அந்தத் திருமணம், இந்து திருமணச் சட்ட விதிகளின்படி செல்லுபடி ஆகாது. பாணிக்ரஹணம் (மணமகளின் கரம் பற்றி உறுதி கூறுதல்), ஸப்தபதி (மணமகளின் வலது கால் கட்டை விரலை பிடித்து ஏழு அடி எடுத்து வைத்தல்) ஆகிய நிகழ்வுகள் நடந்தால்தான் இந்து மத திருமண விதிகளின்படி திருமணம் நடந்ததாக ஏற்றுக்கொள்ளப்படும். சாஸ்திர விதிகளின்படி தாலி கட்டுதல் கிடையாது. ஆனால்
புராணங்களில் தாலிகட்டுதல் என்கிற சம்பிரதாயத்திற்கான ஆதாரம் உண்டு.
நம்மவர்கள் மீனாக்ஷி கல்யாணத்தை உதாரணமாகக் கொள்கிறார்கள். மீனாக்ஷி கல்யாணத்தின்போது சுந்தரேஸ்வரர், அன்னை மீனாக்ஷியின் கழுத்தில் மங்கலநாண் அணிவித்தார் என்று சொல்லப்பட்டுள்ளதை ஆதாரமாகக் கொண்டு, திருமணத்தின்போது தாலிகட்டுகின்ற சம்பிரதாயம் தோன்றியிருப்பதாக சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள் சொல்கிறார்கள்.
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,( E Magazine editor)
இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture . Organization.
www.modernhinduculture.com

இந்து திருமண விதிகளின்படி ஆரம்ப காலத்தில் தாலி கட்டும் சம்பிரதாயம் கிடையாது.
Scroll to top