திருமண மேடையில் ‘அரசாணிக்கால்’ என்பதை அறிவோம்.

திருமண மேடையில் ‘அரசாணிக்கால்’ என்பதை அறிவோம்.
திருமண மேடையில் அரசாணிக்கால் நடுவது என்பது வரலாறு, தெய்வீகம் மற்றும் சம்பிரதாயம் ஆகிய மூன்றின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொன்றாகக் காண்போம்.
அரச மரத்தின் அடிபாகத்தில் பிரம்மாவும், மத்தியில் மஹாவிஷ்ணுவும், உச்சியில் பரமேஸ்வரனும் வசிக்கிறார்கள் என்பதால் மும்மூர்த்திகளையும் திருமண மேடைக்கு வரவழைக்கும் நோக்கத்தோடு அரசமரக் கிளையை மணவறையில் நட்டு வைக்கிறார்கள். முகூர்த்தம் தொடங்குவதற்கு முன் துவக்க நிகழ்ச்சியாக இந்த அரசமரக் கிளைக்கு பால், தயிர், கோமியம் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு, வஸ்திரமும் மாலையும் சாற்றி அதனை மும்மூர்த்திகளின் ஸ்வரூபமாக வைத்து பூஜித்து வணங்குவார்கள். மும்மூர்த்திகளின் முன்னிலையில் திருமணம் நடப்பதாக நம்புகிறார்கள்.
மூன்றாவதாக சம்பிரதாயமான ஒரு நம்பிக்கையும் உள்ளது. அதாவது திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற சொல்வழக்கு உண்டு.
ஆங்கிலத்தில் “Marriages are made in heaven” என்று சொல்வார்கள். திருமண மேடையில் ஸ்வர்க்க லோகம் போன்றதொரு அமைப்பினை உருவாக்கி வைக்கிறார்கள். அதனால்தான் ஏழை முதல் பணக்காரர் வரை யாராக இருந்தாலும் அவரவர் வசதிக்கேற்ப மணவறையை அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள். வானுலகில் உள்ள சொர்க்க லோகத்தில் கற்பக விருட்சம் என்ற அபூர்வ சக்தியை உடைய மரம் ஒன்று உண்டு.
அந்த மரத்தின் கீழ் அமர்ந்து எதை நினைத்தாலும் நடந்துவிடும், என்ன வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோமோ அந்த வேண்டுதல் நிச்சயமாக நிறைவேறிவிடும் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட கற்பக விருட்சத்தை மணவறையில் வைத்து, அதனடியில் மணமக்கள் அமர்ந்து பிரார்த்தனை செய்து தங்கள் வாழ்வினைத் துவக்கும்போது அவர்களுக்குத் தேவையான செல்வங்கள் அனைத்தும் அவர்களுடைய வாழ்வினில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையினாலும் அரசாணிக்கால் என்பது கற்பக விருட்சமாக மணவறையில் வைத்து பூஜிக்கப்படுகிறது.
அடுத்ததாக மங்கலப்பானைகள் எதற்காக வைக்கப்படுகின்றன என்பதையும் காண்போம். நம் வீட்டினில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் நமது முன்னோர்களின் ஆசியை அவசியம் பெறவேண்டும். முன்னோர்களின் ஆசியின்றி எந்த செயலைச் செய்தாலும் அதில் வெற்றி கிடைக்காது. அதிலும் திருமணம் என்று வரும்போது, வம்ச விருத்தி என்பது முன்னோர்களின் ஆசியால்தான் உண்டாகும். இங்கும் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற சொல்வழக்கு ஆதாரமாகச் சொல்லப்படுகிறது. அதாவது மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இரண்டு குடும்பத்தின் முன்னோர்களும் சொர்க்க லோகத்தில் சந்தித்து இன்னார்க்கு இன்னார் என்று நிச்சயம் செய்து வைத்திருப்பார்களாம்.
அதனை மெய்ப்படுத்தும் விதமாக அந்தப் பானைகளில் இரு குடும்பத்தின் முன்னோர்களையும் ஆவாஹணம் செய்து வைப்பார்கள். மணமக்கள் மனையில் வந்து அமர்வதற்கு முன்னால் இந்த மங்கலப் பானைகளை பூஜித்து அங்கே வைக்கப்பட்டிருக்கும் மணப்பொங்கல், வெல்லம் மற்றும் பழங்களை நிவேதனம் செய்து வணங்குவார்கள். சிறிதளவு அந்த பிரசாதத்தை தேவலோகத்தில் தரப்படுகின்ற அமிர்தமாக எண்ணி உட்கொண்ட பின்பு மனையில் வந்து அமர்ந்து முகூர்த்த நிகழ்வுகளைத் துவங்குவார்கள். மணவறையில் வைக்கப்படுகின்ற மங்கலப் பானைகள் மணமக்களின் முன்னோர்களின் வடிவமாக அமைக்கப்படுகிறது.
இந்த சம்பிரதாயத்தை அந்தண குலத்தினர் நாந்தீ சோபனம் என்ற பெயரில் திருமணத்திற்கு முதல்நாள் விரதத்தின்போது ஒன்பது அந்தணர்களை அமரவைத்து செய்து முடிப்பார்கள். இதர பிரிவினர் மங்கலப்பானைகளில் இந்த நாந்தீ சோபன தேவதைகளை ஆவாஹணம் செய்து வணங்குகிறார்கள். இந்து மத சடங்குகளில் செய்யப்படுகின்ற அனைத்து விதமான சம்பிரதாயங்களுக்கும் அர்த்தமும் உண்டு, ஆதாரமும் உண்டு என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணங்கள் என்று திருமணத்தின்போது அரசாணிக்கால் நடுவதையும், மங்கலப் பானைகள் வைத்து வணங்குவதையும் சொல்லலாம்.
நன்றி! ஹரிப்ரசாத் அவர்கள்.

தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,( E Magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture . Organization.
www.modernhinduculture.com
திருமண மேடையில் ‘அரசாணிக்கால்’ என்பதை அறிவோம்.
Scroll to top