தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
யஜ்ஞோபவீதம் எனப்படும் பூணூல் – சிறு குறிப்பு!!!
உபநயனம் செய்யப்பெற்றவனுக்கு எப்போதும் இடது தோளில் தொங்கவேண்டிய ஒன்று பூணூல். துறவறம் ஏற்கும்போது மட்டுமே , அது தோளில் இருந்து விலகும்.
முற்றிலும் அறுந்துவிட்டால், உடனே மாற்ற வேண்டும்.
அழுக்கு ஏறியிருந்தாலும், மூன்றில் ஒரு நூல் அறுந்து போனாலும், எந்த நிமிடத்திலும் அறுந்து போகும் நிலையில் நைந்திருந்தாலும், பிறப்பு- இறப்பு போன்ற தீட்டுபட்ட வேளையிலும், பெண்மணிகள் மூன்று நாள் தீட்டைச் சந்திக்கும் வேளையிலும், தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு பிராயச்சித்தச் சடங்குகளில் ஈடுபடும்போதும் பூணூலை மாற்றுவது சிறப்பு.
பூணூலை மாற்றும்போதுகூட, புதுப் பூணூலை அணிந்த பிறகே பழைய பூணூலை அகற்றவேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன! எந்த வேளையிலும் உப நயனம் செயப்பெற்றவன் பூணூல் இல்லாத தோளுடன் காட்சியளிக்கக் கூடாது.
பூணூல் பற்றிய பெருமை தெரியாதவர்கள், பூணூலை கழற்றி வைப்பவர்கள் , அது பற்றி பெரிதாக கவலைப்படாதவர்கள் , அதை ஒரு நூலாக நினைத்தாலும் , பூணூலின் தரம் , அதன் மகிமை ஒரு நாளும் குன்றிவிடாது நண்பர்களே!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

யஜ்ஞோபவீதம் எனப்படும் பூணூல் – சிறு குறிப்பு!!!