தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
அது என்ன 12 வருஷங்கள்?
தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது ?
அண்ணன்- தம்பி, தந்தை- தனயன் எனும் உறவில் உள்ளவர்கள், 12 வருட காலம் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருந்தால், அவர்களது தொடர்பு தானாகவே காலாவதியாகிவிடும்; மீண்டும் அவர்களுக்கான தொடர்பை- உறவைப் புதுப்பிக்க, உரிய பரிகாரத்துடன் இணையவேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம்.
முதியவரான தந்தை காணாமல் போய்விட்டார்; அவர் இருக்கும் இடம் உட்பட, எந்தவிதத் தகவலும் தெரியவில்லை. மகனும் முற்றிலும் மறந்த நிலையில் வாழ்கிறார். இப்படியே 12 வருடங்கள் தாண்டிவிட்டால், அந்தத் தந்தை இறந்திருப்பார் என்று கருதி, அவருக்கான இறுதிச் சடங்கை நிறைவேற்றலாம் என்கிறது தர்மசாஸ்திரம்.
அதற்கு மேலும் மெத்தனமாக இருந்தால், தந்தையின் தொடர்பு முற்றிலும் அற்றுப்போகும்; ஈமச்சடங்கை நிறைவேற்றவும் இயலாது போகும். ஆக, தொடர்பின் எல்லை… 12 வருடங்கள்!
கும்பாபிஷேகத்துக்குப் பிறகு 12 வருடங்கள் கழிந்ததும், மருந்தின் தொடர்பு விட்டுப்போவதால், மீண்டும் தொடர்பை ஏற்படுத்த கும்பாபிஷேகம் தேவை. ஆனபடியினாலத்தான் 12 வருஷங்கள் கழிந்ததும் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டி உள்ளது!!!
பாண்டவர்களுக்கு வனவாசம் 12 வருடங்கள்; அதன் பிறகு, அஞ்ஞாத வாசம் என்று வைத்ததும், ராமாயணத்தில் ஸ்ரீராமனுக்கு 14 வருடங்கள் வனவாசம் என்ற குறிப்பும் தொடர்பைத் துண்டிக்கும் நோக்கத்துடன் எழுந்தவையே.
ஆக, எல்லாச் செயல்பாட்டுக்கும் ஓர் எல்லை உண்டு. அதுபோல், கும்பாபிஷேகத்துக்கும் இருக்க வேண்டியது அவசியம் என்பது தர்ம சாஸ்திரத்தின் விளக்கம்!!!
தகவல் நன்றி: பிரம்மஸ்ரீ சேஷாத்திரிநாத சாஸ்திரிகள்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது ?