மஹா கும்பாபிஷேகமும் கங்கா தீர்த்த சங்கிரஹணமும்!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
மஹா கும்பாபிஷேகமும் கங்கா தீர்த்த சங்கிரஹணமும்!!
மஹாகும்பாபிஷேக காலத்தில் கங்கா நீரை எடுத்து வந்து வழிபாடுகளில் பயன்படுத்துவதை அவதானித்து இருப்பீர்கள்! இதனுடைய முக்கியத்துவத்தை பார்ப்போம்!
சிவன் சிரசில் வாசம் செய்யும் கங்காதேவி, இறைவனின் தலையில் இருந்தே உருவாவதாக, புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. உயிர்கள் வாழ ஆதாரமான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு பிரதானமானது, நீர். இறைவனிடம் இருந்து உருவாகும் கங்கை நீர், நமக்கு பாவ விமோசனம் அளிக்கும் நதியாக உள்ளது. காசியில் இருந்து இறைவனின் திருமேனி கொண்டு வரப்பட்டதாக ஐதீகம் உள்ள நிலையில், இக்கோவிலில் கங்கையும் எழுந்தருளி, காசிக்கு இணையான புண்ணியத்தை நமக்கு அளிப்பதாக ஐதீகம்.
சரி, உலகத்தில் பல பாகங்களிலும் கும்பாபிஷேகங்கள் நடைபெறுகின்றன , அங்கு கங்கா தீர்த்தம் கொண்டு செல்லப்படுகிறதா? அப்படி இதுதான் கங்கா தீர்த்தம் என்று யாரும் கொடுத்தால் அது எவ்வளவு தூய்மையானது என்று பல கேள்விகள் எழுகின்றன, கங்கா தீர்த்தம் இல்லை என்பதற்காக இறைவனுக்கு அபிஷேகம் செய்யாமல் இருக்க முடியுமா? கும்பாபிஷேகம் போன்ற வழிபாடுகளை செய்யாமல் இருக்க முடியுமா? ஆதலினால்தான் ஆன்மீக நூல்கள் பலவழிமுறைகளை எமக்கு சொல்லித் தந்துள்ளன!!!
அதாவது கோவில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட வைபவங்களுக்கு, கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளின் தீர்த்தம் எடுத்து வர முடியாதவர்கள், எந்த வறட்சி வந்தாலும் வற்றாத நீர் நிலைகள், ஆழமே காண முடியாத ஆலய கிணறு , நீள அகல ஆழம் காண முடியாத கடல்கள் போன்ற நீர் நிலைகளில் கங்கா தேவி வாசம் செய்கிறாள் என்ற ஐதீகத்தின்படி அந்த நீரினை உரிய மந்திர வழிபாடுகள் செய்து கங்கா தேவி எழுதருளி உள்ள அந்த நீரை பயன்படுத்த முடியும் என்று சொல்லப்பட்டிருப்பதினால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை நண்பர்களே!!!
எமது வழிபாடுகளை முறைப்படி இயற்ற ஆன்மீக நூலகளில் சொல்லப் விடயங்கள், ஐதீகங்கள் போன்றவற்றை பின்பற்றி இறைவனை வழிபட்டு பலனைப் பெறுவோம்!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
மஹா கும்பாபிஷேகமும் கங்கா தீர்த்த சங்கிரஹணமும்!!
Scroll to top