சிராத்தம் சம்பந்தமானது! தகவல்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் இருக்கலாம், தெளிவோமே !!!
சகோதரர்கள் ஒன்றாக இணைந்து வசிக்கும் பட்சத்தில் ஒன்றாகவே சிராத்தம் செய்யலாம். வெவ்வேறு ஊர்களில் தனித்தனியே வசிப்பவர்கள் என்றால் தனித்தனியாகத்தான் சிராத்தம் செய்ய வேண்டும். பாகம் பிரிந்துவிட்டாலே சிராத்தமும் தனிதான் என்பதை சாஸ்திரம் உறுதியாகச் சொல்கிறது. பாகம் என்றால் சொத்தில் பாகப்பிரிவினை என்று பொருள்காணக் கூடாது. பாகம் என்றால் சமையல் என்று பொருள்.
நல்ல ருசியாக சமைப்பதை நளபாகம் என்று சொல்லக் கேட்டிருப்போம். ஆக இங்கே பாகம் என்ற வார்த்தைக்கு சமையல் என்று பொருள். தனித்தனியே சமையல் செய்து சாப்பிடுபவர்கள் என்றால் சகோதரர்கள் எல்லோரும் தனித்தனியேதான் சிராத்தம் செய்ய வேண்டும். அதேபோல நாம் எங்கு குடியிருக்கிறோமோ அங்கேதான் சிராத்தம் செய்ய வேண்டும். அதாவது நாம் எங்கு சமைத்து சாப்பிடுகிறோமோ அந்த இடத்தில்தான் சிராத்தத்தையும் செய்ய வேண்டும்.
நன்றி: ஹரிப்ரசாத் அவர்கள்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சரசர்மா
இணையதள மின் இதழ் ஆசிரியர்.
சிராத்தம் சம்பந்தமானது! தகவல்.
Scroll to top