ஒரு தேங்காயை நைவேத்தியம் செய்து உடைப்பதற்கும் சிதறு தேங்காய் உடைப்பதற்கும் என்ன வித்தியாசம்? அறிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஒரு தேங்காயை நைவேத்தியம் செய்து உடைப்பதற்கும் சிதறு தேங்காய் உடைப்பதற்கும் என்ன வித்தியாசம்? அறிவோம்!!!
நிவேதனம் என்ற சொல்லுக்கே ‘ஆண்டவன் முன்னால் அதை பக்தியோடு அவருக்காகக் கொடுப்பது’ என்று அர்த்தம். கடவுளுக்குப் பார்வையிலேயே திருப்தி வரும். த்ருஷ்ட்வா த்ருப்தி. சாப்பிட்டால்தான் திருப்தி என்பதில்லை. அதனால் அவர் முன்பாக வைத்தால் போதும்.
இன்றைய சமூக வலைத்தள பிரகிருதிகள் , கடவுள் சாப்பிடுகிறாரா? ஏன் இப்படி படைக்க வேண்டும் என்று அரை குறை அறிவு கொண்ட சிலர் இந்தக் காலத்தில் பதிந்து கொண்டிருப்பதை பார்க்கலாம். அதற்கு சிலர் ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம்!!!
சிதறுகாய் என்று நாம் உடைப்பது நிவேதனம் என்கிற நோக்கில் இல்லை. அதாவது, ‘உன் முன்னிலையில் பல பேருக்காக இந்தப் பொருளை அளிக்கிறேன்’ என்று அர்த்தம். ‘நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய். உன் பார்வை பட்ட பொருளை பலருக்கு அளிக்கிறேன்’ என்பதுதான் தாத்பர்யம்.
தேங்காயை உடைத்தால் இரண்டே ரெண்டு பேருக்குத்தான் கிடைக்கும். அதே நேரம் சிதறுகாயை , பிரதானமாக தேர் புறப்படமுன்பு அந்த சிதறு தேங்காயை எல்லோரும் எடுத்துக் கொள்ளலாம். பலர் முண்டியடித்து எடுப்பார்கள் ! அவதானித்திருக்கிறோம்!
உடைத்த தேங்காயைக்கூட நாமாக அடுத்தவருக்குக் கொடுத்தால்தான் உண்டு. சிதறுகாய் உடைக்கும்போது, ‘இது எனக்கு’ என்று எடுத்துக் கொள்பவர் உரிமையோடு எடுப்பார். கேட்காமலேயே எல்லோருக்கும் இறைவன் பிரசாதத்தைக் கொடுப்பதற்கான தனி வழி சிதறுகாய். இது எவ்வளவு உசத்தியானது என்பதைப் பாருங்கள் நண்பர்களே!
இதை உணராத சில மேதாவிகள் இன்று தேருக்கு முன்னால் உடைக்கும் தேங்காய் பற்றி நகையாடுவதையும் இன்று பார்க்கிறோம். எல்லோருக்கும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் பேரவா!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

ஒரு தேங்காயை நைவேத்தியம் செய்து உடைப்பதற்கும் சிதறு தேங்காய் உடைப்பதற்கும் என்ன வித்தியாசம்? அறிவோம்!!!
Scroll to top