சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் காட்டுகிறோம்?

சுப நிகழ்ச்சிகளில் வாழை மரம் கட்டுவது என்பது காலம் காலமாக நடைபெறும் ஓர் முக்கிய விடயம். இன்றும் இந்த வழமை உள்ளது. ஏன் அப்படி செய்கிறோம்?
வாழையடி வாழையாக வையகத்துள் வாழ்வாங்கு வாழவேண்டும்’ என்று வாழ்த்துவார்கள். வாழையடி வாழை என்பது பரம்பரையைக் குறிக்கும் சொல். வாழை ஒன்றுதான் தனது நிழலுக்குக் கீழேயே மற்றொரு கன்றையும் உற்பத்தி செய்யக்கூடியது. எனவேதான் திருமணம் முதலான மங்கலச் சடங்குகளுக்கு வாயிலில் பூவும் தாருமாக, குலையுடன் கூடிய வாழைமரங்களைக் கட்டுவதை வழக்கமாகக் கொள்ளப் படுகிறது!
இறைவனுக்கு நைவேத்யம் செய்யும் பழங்களில் முதன்மையான இடத்தினைப் பிடிப்பதும் வாழையே. புனிதத்தன்மையை உடைய இந்த மரங்கள் இருக்கும் இடத்தில் எந்தவிதமான தீயசக்திகளும் அண்டுவதில்லை. குலையுடன் கூடிய வாழை மரம் கட்டுவது என்பது வம்ச விருத்திக்காகவும், தங்கள் பரம்பரை செழிப்பாக வாழவேண்டும் என்பதற்காகவும்தான்.
ஆக வாழை என்பது வம்சவிருத்தியின் அடையாளம் என்பதன் வெளிப்பாடுதான்.
சுப காரியங்கள் ஏன் செய்கிறோம்? சம்பந்தப் பட்ட குடும்பத்தினர் இறைவனின் அருள் கடாட்சம் பெற்று குழந்தைகள் சகிதம் சிறப்பாக வாழவேண்டும் என்ற பிரார்த்தனை அங்கு முக்கியமாகிறது,
Prepared By:
Panchadcharan Swaminathasarma
E magazine Editor,
www.modernhinduculture.com
சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் காட்டுகிறோம்?
Scroll to top