நடுத்தெரு நாராயணன்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
பல இடங்களில் பார்த்திருப்பீர்கள், கேட்டு இருப்பீர்கள் ,சிலர் பேசும் போது , ‘நடுத்தெரு நாராயணன்’ நீ அப்படிதான் வரப் போகிறாய் அது இது என்று பேசுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த ‘நடுத்தெரு நாராயணன்’ என்ற வார்த்தை திரிபடைந்து வந்துள்ளதை அவதானிக்கலாம்.
பேச்சுவழக்கில் பல வார்த்தைகள் திரிந்துவிட்டதற்கு இதுவும் ஒரு உதாரணம். அந்த வார்த்தை நடுத்தெரு நாராயணன் அல்ல, ‘நடுத்தரு’ நாராயணன். தரு என்ற வார்த்தைக்கு மரம் என்று பொருள். அரச மரத்தைச் சுற்றி வந்து வணங்கும்போது ‘மூலதோ ப்ரஹ்ம ரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே, அக்ரத: சிவய ரூபாய, வ்ருக்ஷராஜாயதே நம:’ என்ற மந்திரத்தைச் சொல்லி வணங்குவார்கள்.
அதாவது, அடிப்பகுதியில் ப்ரஹ்ம ரூபத்தையும், நடுவினில் விஷ்ணு ரூபத்தையும், உச்சியில் சிவ ரூபத்தையும் கொண்டிருக்கும் அரசமரத்தினை நமஸ்கரிக்கிறேன் என்பது இதன் பொருள். தரு என்றால் மரம். மரத்தின் மத்தியில், அதாவது தருவின் நடுவில் விஷ்ணுவாகிய நாராயணன் குடியிருக்கிறார் என்பதை நடுத்தரு நாராயணன் என்று குறிப்பிட்டார்கள். மரத்தின் நடுவில் என்பது நடுத்தரு என்ற வார்த்தையாக மாறி அது காலப்போக்கில் நடுத்தெரு நாராயணன் என்று மாறிவிட்டது. நடுத்தரு நாராயணனை வணங்கி வருவதால் நிச்சயமாக நன்மை கிடைக்கும்.
prepared by: panchadcharan swaminathasarma
நடுத்தெரு நாராயணன்?
Scroll to top