RIP என்று ஓர் இந்து மத அமரருக்கு நாம் சொல்வதை, பதிவதை தவிர்த்து விடுவோம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
RIP என்று ஓர் இந்து மத அமரருக்கு நாம் சொல்வதை, பதிவதை தவிர்த்து விடுவோம்.
RIP என்றால் Rest in Peace என்று கிறிஸ்துவ மதத்தினர் தங்கள் இரங்கல் செய்தியில் கூறுவர், அதாவது அமைதியாக ஓய்வில் இருக்கும் படியாக இறந்த அந்த கிறிஸ்தவ சடலத்தைப் பார்த்து கூறுவார்கள்.
அவர்களது மதத்தின்படி, இறந்தவர்களை புதைப்பது தான் வழக்கம். அப்படி புதைக்கும் போது அவர்களது ஆன்மாவும் புதைக்கப்பட்டு காத்திருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள், ஏன் கத்திருக்கிறார்கள்??
”ஜட்ஜ்மெண்ட் டே” என்று அவர்கள் அழைக்கும் தினம் மீண்டும் ஏசு வரும் நாளாகும் . அன்று கல்லறைகளில்,ஓய்வில் காத்திருக்கும் ஆத்மாக்கள் சொர்க்கத் திற்கோ அல்லது நரகத்திற்கு அனுப்பப்படும் அவரவர் செய்த பாவ, புண்ணிய காரியங்களின்படி என்பதே நம்பிக்கை. எனவே ஒருவர் இறந்தவுடன் Rest In Peace நிம்மதியாக காத்திருங்கள் என்று அந்த இறந்த ஆத்மாவைப் பார்த்து சொல்வார்கள். அது அவர்களது மத நம்பிக்கை!
RIP- இந்து மதம் கூறுவது என்ன?
இந்து மதம் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டது ஆன்மா வேறு அழியாதது. உடல் அழிவது. ஒருவர் செய்யும் பாவ புண்ணிய கணக்கின்படி அந்த ஆன்மா அடுத்த பிறவி எடுத்து வரும். அந்த அடிப்படையில் ஓர் இந்து ஆன்மா அழியாமல் இருக்கும் போது அங்கு RIP என்று சொல்வது பொருத்தம் அற்றது, மேலும் , ” ஜட்ஜ் மெண்ட் டே ” என்று ஒரு தினம் எங்களுக்கு இல்லை!
புண்ணிய ஆத்மாக்கள் இந்த பிறப்பு இறப்பு சூழற்சியில் இருந்து விடுபட்டு மோட்சம் அடைந்துவிடும். கடவுளின் திருவடிகளில் சரண் அடைந்துவிடுகிறது, ஆனபடியினால்தான் இந்து மதத்தில் ,இறந்த ஆத்மா ஓர் புண்ணிய ஆத்மா என்ற அடிப்படையில் நாம் , அந்த ஆத்மா இறைவன் திருவடியில் சாந்தி அடைந்து மோட்சத்தை அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோமே தவிர அந்த ஆத்மா அமைதியாக இருக்க வேண்டும் என்று நாம் சொல்வதில்லை.
எனவே தான் நாம் ஒருவர் இறந்தவுடன் மோட்சத்தை அடைய பிரார்த்தனை என்றோ ஓம் சத்கதி என்றோ ஓம் சாந்தி என்றோ சொல்ல வேண்டும்.
மேலும் சொல்லப்போனால் RIP என்று ஓர் இந்து ஆத்மாவை சொல்வது சாபமாகவே முடியும், அதாவது அந்த இறந்த இந்து ஆத்மாவை நாம் சொர்க்கத்துக்கு போவதை பிரார்த்தனை பண்ணாமல் RIP அமைதியாக இருக்கும்படி சொல்கிறோம். அது தவறு.
இதனால்தான் இறந்தவுடன், நாம் செய்யும் 13 நாள் காரியங்களில் குடும்பத்தினர் நிதமும் இந்த உலகை விட்டு பிதிர் உலகிற்கு செல்ல வேண்டுமாய் பலவழிகளில் கேட்டு காரியங்களை செய்கின்றனர்
எனவே இனி எவரேனும் இந்துக்கள் இறந்தால் தயை கூர்ந்து Om Shanti! May the Soul attain Moksha Om Sadgati! அல்லது அன்னாரின் ஆத்மா இறைவன் திருவடியில் சாந்தி அடைந்து மோட்சத்தை அடைய பிரார்த்திக்கிறோம் என்றே செய்தி அனுப்புங்கள்!!!
Why not say RIP RIP means Rest in Peace Christianity will say in your condolence message According to their religion, burying the dead is the habit. They believe their souls are buried too The day they call it ”Judgement Day” is the day of Jesus coming again. The belief is that the souls waiting in the graves will be sent to heaven or hell according to their sins and good deeds. So it is usual to say Rest In Peace after someone dies RIP What does Hinduism say Hinduism believes in reincarnation. The soul is immortal. The body is destroyed. According to the sins of one, the soul will take the next birth. Holy souls will be free from this birth and death situation and will be saved. Surrendering at the feet of God That’s why we should say prayer or om satkati or om shanti for salvation when one dies Saying RIP can be a curse. The dead soul is called a corpse. Soul roaming in the form of corpse is like a devil This is why the family should leave this world and go to the corpse world in the 13-day things done after death. They ask in many ways and do things. So if any Hindus die please say ” Om Shanti! May the Soul attain Moksha Om Sadgati! Please send me a message as it is and not ”RIP”
நன்றி :”தெய்வீகம்”
prepared by
panchadcharan swaminathasarma
E Magazine Editor,
Modern Hindu Culture . Org
www.modernhinduculture.com
RIP என்று ஓர் இந்து மத அமரருக்கு நாம் சொல்வதை, பதிவதை தவிர்த்து விடுவோம்
Scroll to top