தெய்வ அனுக்கிரகம் பெறுவது எப்படி? மனதில் உள்ள அழுக்காறுகளை அகற்றுங்கள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
தெய்வ அனுக்கிரகம் பெறுவது எப்படி? மனதில் உள்ள அழுக்காறுகளை அகற்றுங்கள், கடவுள் அருள் நிச்சயம் உண்டு!
சாயம் தோய்க்கப்பட்ட துணி சாயத்தின் நிறத்தை அடைவதைப் போல, ஒருவன் நல்லவனையோ, கெட்டவனையோ, தவசியையோ, திருடனையோ சேர்ந்தால் அவர்களைப் போலவே ஆகிறான். மனிதன் எப்படிப்பட்டவர்களுடன் சேருகின்றானோ, யாருடன் வேலை செய்கிறானோ அப்படிப்பட்டவனாகவே ஆகிறான். எது எதிலிருந்து மனிதன் விலகி இருக்கிறானோ அது அதிலிருந்து வரும் தொல்லைகளிலிருந்தும் அவன் விடுபடுகிறான்.
மேலே சொன்ன கருத்துகள், விதுரர் திருதராஷ்டிர மன்னனுக்கு எடுத்துச் சொன்னவை. மிகவும் புகழ் பெற்ற ‘விதுர நீதி’ இதைத் தெளிவாக விளக்குகிறது.
இது ஏதோ முன்னொரு காலத்தில் நடைபெற்ற பாரதக் கதை என்று நாம் எடுத்துக் கொண்டாலும் அதில் சொல்லப்பட்ட நீதிக் கருத்துக்கள் இன்றும் நம் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ‘கூடா நட்பு கேடு தரும்’ என்று இதனை மிகவும் தருக்கிச் சொன்னார்கள் நம் பெரியவர்கள்!
இன்றைய நம் சமூகத்தில் நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் பேராசை, ஒன்றை அடைய வேண்டும் என்கிற வெறி, அடைய முடியாமல் போனதால் ஏற்படுகிற கோபம், அதனால் ஏற்படுகிற தவறான நட்பு இப்படி ஒன்றன் பின் ஒன்றாக சங்கிலிப் பிணைப்பாக நீளும். திருதராஷ்டிரனுக்கு உண்மை நிலை தெரியாதா என்ன? பஞ்சபாண்டவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை, அவர்கள் காருண்யம் மிக்கவர்கள் என்பது நன்றாகவே தெரியும். தெரிந்தும் என்ன பயன்?
மகன் துரியோதனன் மீது உள்ள பாசம், அவன் செய்யும் தவறுகள் இவர் கண்ணை மறைத்து விட்டது. இவனின் புத்திர பாசத்தால் பூமியே யுத்தத்தால் ரணகளமானது. சரி இதற்கெல்லாம் என்ன காரணம்? இந்த துன்பங்கள் வராமல் தடுப்பது எப்படி?
மனதில் உள்ள இப்படியான அழுக்காறுகளை அகற்றி ,நியாயத்தின் பால் இருந்து இறைவனை வழிபட்டால் நாம் எண்ணுவது நிறைவேறும்!!!
Image may contain: text that says 'Dheivegam.com'
prepared by: panchadcharan swaminathasarma
தெய்வ அனுக்கிரகம் பெறுவது எப்படி? மனதில் உள்ள அழுக்காறுகளை அகற்றுங்கள்
Scroll to top