எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்

எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்
விநாயகருக்கு தேங்காய் எண்ணெய், மகாலட்சுமிக்கு பசுநெய், குலதெய்வத்துக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய், பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்களுக்கு ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூடவிளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.
வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமயலறை, துளசி மாடம்
போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.
தீபம் ஏற்றும் நேரம்
தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்).
காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.
விளக்கு ஏற்றும் முறை
ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் – குடும்ப ஒற்றுமை கிட்டும்.
முன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் – பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும்.
ஐந்து முகம் ஏற்றினால் – சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும்.
விளக்கேற்றும் திசை
கிழக்கு – துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு – கடன், தோஷம் நீங்கும்
வடக்கு – திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)
எண்ணெயின் பலன்
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய் – செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய் – ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய் – வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய் – சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய் – புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ) – அம்மன் அருள்
வேப்பெண்ணை – கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்
ஆமணக்கு எண்ணை – அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது
கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.
எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்
விநாயகர் – தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி – பசுநெய்
குலதெய்வம் – வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் – நல்லெண்ணெய்
அம்மன் – விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் – நல்லெண்ணெய்
திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள்
திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். திரிகளும்,பயன்களும் குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
பருத்திப் பஞ்சு – குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
வாழைத் தண்டின் நார் – முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
தாமரைத்தண்டு நூல் – முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
வெள்ளை எருக்கம்பட்டை – செல்வம் பெருகும்.
புதிய மஞ்சள் துணி – நோய்கள் குணமாகும்.
புதிய சிவப்பு வண்ண துணி – குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
புதிய வெள்ளை துணி திரி – அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.
(துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.)
விளக்கின் தன்மை
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு – பீடை விலகும்
வெள்ளி விளக்கு – திருமகள் அருள் கிடைக்கும்
பஞ்ச லோக விளக்கு – தேவதை வசியம் உண்டாகும்
வெண்கல விளக்கு – ஆரோக்கியம் உண்டாகும்
இரும்பு விளக்கு – சனி கிரக தோஷம் விலகும்.
திருவிளக்கின் சிறப்பு
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
விளக்கு துலக்க நல்ல நாள்
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில்துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.
விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்
ஞாயிறு – கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் – மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் – குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி – வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.
தீபத்தை குளிர வைக்கும் முறை
பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. வாயால் ஊதி அணைக்கக்கூடாது.
பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை (எண்ணெய் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்ரூபிணே நம என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும். விளக்கேற்றலாம்.
By: Thulasikanthakurukal Somaskanthakurukal
எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்
Scroll to top