அறிவோம் நண்பர்களே:
ஈஸ்வரன் , நடராஜராக காட்சி தந்து அருள கூடிய நாள், மார்கழி மாசத்துல வருகிற திருவாதிரை நட்சத்திர தினம். அன்றைய தினத்தில் களி நைவேத்யம் செய்து சிவனை வழிபாடு செய்வது , கல்யாண பாக்யமும், மாங்கல்யமும் அதாவது (தீர்க்க சுமங்கலித்துவம்) தரும் என்பது ஐதீகம். மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதனையே ஆருத்ரா தரிசனம் என்கின்றனர். ஆருத்ரா என்பது ஆதிரையை குறிக்கும் சொல். சிவனுக்கு உரிய ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை.
எனவேதான் இந்த திருவாதிரை நாளில் ஆடல் அரசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. .திருவாதிரை திருநாள் அன்று அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடி, சிவாலயத்தில் உள்ள நடராஜர் சந்நிதியில் நடக்கும் திருவாதிரை திருநடன நிகழ்ச்சியை காண வேண்டும். சிறிதளவு பிரசாதக் களி சாப்பிடலாம். மற்றபடி உபவாசம் (ஏதும் சாப்பிடாமல்) இருப்பதே உயர்ந்தது. சிவ நாமம் உச்சரித்து நமக்கு வேண்டும் வரம் கேட்டு பிரார்தனை செய்வோம்
திருவாதிரை விரதம்.